Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிகில் பட நடிகையை ஏமாற்றிய பிக்பாஸ் கவின் படக்குழு.. செம கடுப்பில் ரசிகர்கள்!
பிகில் படத்தில் விஜய்க்கு வெற்றி கிடைத்ததோ இல்லையோ அந்த படத்தில் நடித்த நடிகைகள் பலருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்து வருகிறது.
அந்த வகையில் பிகில் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் அமிர்தா ஐயர்.
பிகில் படத்திற்கு பிறகு தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் அம்ரிதா மற்றும் பிக் பாஸ் கவின் ஆகிய இருவரும் நடித்த லிப்ட் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

lift-movie
ஆனால் லிப்ட் படக்குழுவினர் மீது அம்ரிதா ஐயர் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. அதற்கு காரணம் அம்ரிதாவுக்கு பதிலாக வேறு ஒருவர் டப்பிங் பேசி விட்டாராம்.
இதுகுறித்து அம்ரிதாவிடம் படக்குழுவினர் ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை என்பது தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தான் ஒரு தமிழ் பெண் தான் எனவும், நடிகையாக இருந்தாலும் படக்குழுவினரிடம் நான் மரியாதையை தான் எதிர்பார்க்கிறேன் எனவும், அவர்கள் சொல்லாமல் இந்த காரியத்தை செய்தது தனக்கு அதிர்ச்சி கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இனி எக்காரணம் கொண்டும் அந்த பட குழுவினருடன் மீண்டும் பணி புரிய மாட்டேன் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
