Connect with us

Cinemapettai

அட்லீ பண்ணிய கோளாறு.. ரகசியமாக நடக்கும் பிகில் படத்தின் விடுபட்ட காட்சிகள்

bigil-atlee

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அட்லீ பண்ணிய கோளாறு.. ரகசியமாக நடக்கும் பிகில் படத்தின் விடுபட்ட காட்சிகள்

விஜய் நடித்து ஏஜிஎஸ் தயாரித்து அட்லீ இயக்கி கொண்டிருக்கும் பிரம்மாண்ட பட்ஜெட் படம் பிகில். விஜய் நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட். படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டது.

விஜய் எல்லோருக்கும் தங்க மோதிரம் பரிசாக அளித்தார். மற்ற வேலைகள் படுவேகமாக நடந்துகொண்டிருக்கிறது. எடிட்டிங் முடிந்து டப்பிங் முடியும் தருவாயில் உள்ளது. ஒரு சில காட்சிகளை பார்த்த அட்லி ஒரு சில காட்சிகள் சரிவர வராததால் அந்த காட்சிகளை மறுபடியும் ஷூட் செய்ய வேண்டும் என விஜய்யிடம் சொல்லியுள்ளார்.

ஓகே அப்படியே செய்யலாம் என விஜய் சொல்ல ஆனால் ஏஜிஎஸ் நிறுவனம் இப்பொழுது சொன்னதைவிட பல மடங்கு பட்ஜெட் அதிகமாகிவிட்டது. நீங்களே பார்த்து செய்து எடுத்துக்கொள்ளுங்கள் என கைவிரித்து விட்டது.

ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டது என எல்லோருக்கும் தெரிந்து விட்டதால் இது இரகசியமாக எடுக்க வேண்டுமென உத்தரவு வந்துள்ளது. வேறு வழி தெரியாத அட்லி தன் சொந்த பணத்தில் யாருக்கும் சொல்லாமல் வெறும் கேமரா மட்டும் தூக்கிகொண்டு படப்பிடிப்பு நடத்த திட்டம் தீட்டி உள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top