Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி வெறித்தனம்: அட்டகாசமான அப்டேட் கொடுத்த பிகில் தயாரிப்பாளர்.. வைரலாகும் ட்விட்டர் பதிவு
தளபதி ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் எதிர்பார்த்த பிகில் படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி செப்டம்பர்-19 என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனை தளபதி ரசிகர்கள் பட்டாசு வெடிக்காத குறையாக கொண்டாடி வருகின்றனர்.
தளபதி விஜய் மற்றும் நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம்”பிகில்”. இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளிவந்த ‘சிங்கப் பெண்ணே’ மற்றும் ‘வெறித்தனம்’ பாடல்களால் youtube இணையதளத்தில் ரணகளம் ஆக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தளபதி ரசிகர்கள் படத்தின் டீசர் அப்டேட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார், தயாரிப்பாளர்.
ரசிகர்கள் தளபதியை நேரில் பார்ப்பதற்காக மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். கண்டிப்பாக இளையதளபதி விஜய் ஒரு குட்டி கதையின் மூலம் மீண்டும் ரசிகர் சந்தோசப் படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “தளபதி விஜயின் படத்திற்கு படம் அவரின் ஆடியோ ரிலீஸ் தேதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நானே,அவரது ஆடியோ ரிலீஸ் தேதியை அறிவிப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது” என்று பூரித்து வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி “பிகில்” படத்தின் ஆடியோவை வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
Every year I wait for this particular update just to block my date and wait for my invite to attend the audio launch and listen to our #Thalapathy’s speech ? Can’t believe I am announcing it this year. Dreams do come true ♥️ 19/9/19 will be special #BIGILAudioFromSept19
— Archana Kalpathi (@archanakalpathi) September 11, 2019
We have planned a truly special event with @arrahman Sir’s amazing musical and some beautiful performances by a team of world class artists and technicians @actorvijay @Atlee_dir @SonyMusicSouth @Ags_production #Bigil #ExpectTheUnexpected #BigilDiwali? https://t.co/myWtpGtCn7
— Archana Kalpathi (@archanakalpathi) September 11, 2019
