Connect with us

Cinemapettai

இந்த வருட பாக்ஸ் ஆபீஸ் கிங் யார்? ரசிகர்களை உசுப்பேற்றி வேடிக்கை பார்க்கும் பிரபல திரையரங்கம்

bigil-viswasam

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த வருட பாக்ஸ் ஆபீஸ் கிங் யார்? ரசிகர்களை உசுப்பேற்றி வேடிக்கை பார்க்கும் பிரபல திரையரங்கம்

தமிழ் சினிமாவில் தற்போது படங்கள் தியேட்டரில் ஓடும் நாட்களைவிட வசூலை வைத்தே வெற்றியா? தோல்வியா? என கணித்து வருகின்றனர். ஒரு காலத்தில் திரைப்படங்கள் 200, 300 நாட்கள் ஓடிய காலங்களும் உண்டு.

ஆனால் தற்போது ஒரு வாரம் தாண்டுவதே பெரிய விஷயமாக இருக்கிறது. காரணம் வாரத்திற்கு நான்கைந்து படங்கள் ரிலீஸுக்கு வரிசை கட்டி நிற்கின்றன. இந்நிலையில் சென்னையில் முக்கியமான தியேட்டராக கருதப்படும் ரோகினி திரையரங்கம் இந்த வருடத்தின் வசூல் மன்னன் யார் என்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது.

இந்த வருடம் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியாகியது. அதில் சில படங்கள் பெரிய வரவேற்பையும், சில படங்கள் தோல்வியையும் பெற்றுள்ளன. அந்த வகையில் இந்த வருடத்தில் ரோகிணி திரையரங்கின் வசூலில் முதலிடம் பெற்றது பிகில் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இது மற்ற ரசிகர்களை உசுப்பேற்றும் விதமாக அமைந்தது. இதனால் கமெண்ட்டுகளில் ரோகிணி திரையரங்கை கழுவிஊத்தி வருகின்றனர்.

தமிழகத்திலேயே முக்கியமான திரையரங்குகளாக கருதப்படும் தியேட்டர் உரிமையாளர்கள் அதிகம் வசூலித்த படங்களின் லிஸ்ட்களை வெளியிட்டு ரசிகர்களுக்குள் சண்டைபோட வைப்பதையே வேலையாக வைத்துள்ளனர்.

இதனால் தியேட்டர்காரர்களுக்கு தான் லாபம் என்பதை புரிந்து கொண்டு, ரசிகர்கள் இந்த மாதிரியான விஷயங்களில் அதிக கவனம் செலுத்தாமல் இருப்பது நல்லது.

comments

comments

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top