Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிகில் ஹவுஸ்புல் என்றதால் சண்டைக்கு போன தல ரசிகர்.. மூக்கை உடைத்து அனுப்பிய பிரபல திரையரங்கம்
தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் வெற்றி நடைபோட்டு வருகிறது. தீபாவளியன்று வெளியான இப்படம் 5 நாட்களில் 200 கோடி வசூலித்துள்ளது.
மேலும் இந்த வருடத்தில் வெளிவந்த அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் அடித்து நொறுக்கி வசூலில் முன்னேறிச் செல்கிறது. ரசிகர்களை தாண்டி பிகில் திரைப்படத்தை திரையரங்கு உரிமையாளர்களும் கொண்டாடி வருகின்றனர். இதனால் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கடும் விரக்தியில் உள்ளனர். மேலும் ட்விட்டரில் பிகில் படத்தைப் பற்றி நெகட்டிவ் விமர்சனங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
இதனால் வெளிப்படையாகவே அவர்களது வன்மம் அனைவருக்கும் தெரியவருகிறது. கும்பகோணத்திலுள்ள வாசு திரையரங்கில் பிகில் திரைப்படம் வெளியாகி தொடர்ந்து ஐந்து நாட்களாக ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுவதை ட்விட்டரில் பதிவு செய்தனர். இதனால் கடுப்பு அடைந்த அஜித் ரசிகர் ஒருவர், விஸ்வாசம் படத்தின் 25-ம் நாள் கூட்டத்தை புகைப்படம் எடுத்து வைத்து கமெண்ட் செய்துள்ளார்.
அதற்கு தியேட்டர் நிர்வாகம் அவரது மூக்கை உடைக்கும் வகையில் ,விஸ்வாசம் படத்தின் கூட்டத்தை ஏற்றுக் கொண்ட உங்களது மனம் பிகில் படத்தை கூட்டத்தை ஏற்க மறுக்கிறது வேடிக்கையாக உள்ளது என்பதை போல கிண்டலாக பதிவிட்டு இருந்தனர்.
நேரடியாக ஒரு திரையரங்கு நிர்வாகமே இவ்வாறு கிண்டல் செய்ததை பார்க்கும்போது சில தல ரசிகர்களின் வன்மங்கள் வெளிப்படையாகவே அறிய முடிகிறது.
Viswasam kum Daily kum photos and tweets potom thalaivaa adhu built-up ah therilaya ungalku, Vijay movies ku houseful nu tweet pota built-up nu solringa 🤷♂
Idhu 5th day working day goes houseful so post poduvom 😎 adhu ungalku built-up madri therinja நிர்வாகம் porupalla😋 https://t.co/7NVP3Bo2L6— Vasu Cinemas (@vasutheatre) October 29, 2019
