Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ் சீசன் 4-ல் களமிறங்கும் பிகில் பட நடிகை.. ஆர்மியை ஆரம்பித்த தளபதி ரசிகர்கள்
சினிமாவைத் தாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 3 சீசன்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
நான்காவது சீசன், முதல் மற்றும் இரண்டாவது புரோமோ வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தற்போது மூன்றாவது புரோமோ இந்த வாரத்தில் வெளியாகவிருக்கிறது.
இந்த மூன்றாவது புரோமோவில், சீசன்4 நிகழ்ச்சியானது எப்போது தொடங்கப்போகிறது? என்கிற தேதி வெளியாகும் என்பதால் மூன்றாவது புரோமோவை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் பிக் பாஸ் சீசன் 4-ன் ஒளிபரப்பு நேரம், நாள்தோறும் இரவு 9.30 மணிக்கு என்ற முடிவு வெளியாகி உள்ளது.
கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த சீசனில் ‘பிகில்’ படத்தில் கேப்டனாக தென்றல் கேரக்டரில் நடித்த நடிகை அமிர்தா களமிறங்கி இருப்பதால், ரசிகர்கள் இப்பவே அவருக்காக ஆர்மியை தொடங்கியுள்ளனர்.
பிக் பாஸ் சீசன்4, மற்ற சீசன்களை காட்டிலும் அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி, TRP ரேட்டிங்கை எகிற வைப்பதற்காகவே விஜய் டிவி நிர்வாகம் போட்டியாளர்களை ரொம்ப கவனமாக செலக்ட் செய்து வருவதாக தெரிகிறது.
