fbpx
Connect with us

Cinemapettai

பிகில் லாபமா? நஷ்டமா? ஒருவழியாக வாயை திறந்த தயாரிப்பாளர்

archana-vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிகில் லாபமா? நஷ்டமா? ஒருவழியாக வாயை திறந்த தயாரிப்பாளர்

தளபதி விஜய் மற்றும் நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் தீபாவளி அன்று வெளிவந்து உலகமெங்கும் வசூல் வேட்டை ஆடிக் கொண்டிருக்கும் திரைப்படம் பிகில். இதனை ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் அவர்கள் சுமார் 180 கோடி பொருட்செலவில் தயாரித்தனர்.

இதனால் படத்தின் வியாபாரம் படுஜோராக நடைபெற்றது. இருந்தாலும் போட்ட முதலீட்டை படம் எடுக்குமா? என்ற சந்தேகம் அனைவருக்குமே இருந்தது. காரணம் தமிழக உரிமையை மட்டும் சுமார் 85 கோடிக்கு விற்கப்பட்டிருந்தது.

தற்போது பிகில் திரைப்படம் அனைவருக்கும் லாபத்தை சம்பாதித்து கொடுத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. ஆனால் வழக்கம்போல் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சண்டை உருவானது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரபல தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பிகில் திரைப்படம் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி கூறினார்.

இதனால் விஜய் ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் உள்ளனர். படம் ஃப்ளாப் என்று சொல்லிக் கொண்டு இருந்தவர்கள் தற்போது மூச்சுவிடாமல் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top