fbpx
Connect with us

Cinemapettai

25 நாட்களில் பிகில் படத்தின் வசூல் விவரம்.. ஆல் ஏரியாவிலும் விஜய்தான் கில்லி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

25 நாட்களில் பிகில் படத்தின் வசூல் விவரம்.. ஆல் ஏரியாவிலும் விஜய்தான் கில்லி

தமிழ் சினிமாக்களில் தற்போதைய நிலவரப்படி பெரும்பாலும் திரைப்படங்கள் ஒரு வாரத்தை தாண்டுவது பெரும் சவாலாக எடுத்துக் கொள்கின்றன. இந்நிலையில் ஒரு படம் 25 நாட்கள் திரையரங்குகளில் நிலைப்பது அரிதாகிவிட்டது.

அந்த காலத்தில் திரைப்படங்கள் இரண்டு, மூன்று வருடங்கள் ஓடியது. ஆனால் தற்போது திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகமானதால் வசூல் நிலவரத்தை வைத்து வெற்றிப்படமா? தோல்வி படமா? என கூறி வருகின்றனர்.

தீபாவளியன்று வெளியான தளபதி விஜய்யின் பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டையாடி உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் இதுவரை எதிர்பார்க்காத அளவு வசூலைப் பெற்றுள்ளது.

குறிப்பாக ஆந்திராவில் இதுவரை மார்க்கெட் இல்லாமல் இருந்த விஜய்க்கு பிகில் படம் 20 கோடி வரை வசூல் செய்து பிரமிக்க வைத்துள்ளது.

இதோ உலகம் முழுவதும் மொத்த வசூல் :

தமிழ்நாடு- ரூ. 141 கோடி
கேரளா- ரூ. 19 கோடி
கர்நாடகா- ரூ. 18.5 கோடி
ஆந்திரா- ரூ. 20.5 கோடி
நார்த் இந்தியா- ரூ. 3 கோடி
அமெரிக்கா, கனடா- ரூ. 10.5 கோடி
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து- ரூ. 11 கோடி
இலங்கை- ரூ. 9 கோடி
பிரான்ஸ்- ரூ. 3.7 கோடி
மலேசியா- ரூ. 20 கோடி
சிங்கப்பூர்- ரூ. 7.8 கோடி
மற்ற இடங்கள்- 5 கோடி

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top