Connect with us

Cinemapettai

பிகில் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 19ல் எங்கே தெரியுமா?

bigil-3rd-song-leaked

Cinema News | சினிமா செய்திகள்

பிகில் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 19ல் எங்கே தெரியுமா?

விஜய் ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் பிகில் படத்தின் ஆடியோ லான்ச் செப்டம்பர் 19 வியாழக்கிழமை சாய்ராம் கல்லூரியில் நடக்கிறது. சில சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஒரு சினிமா இசை வெளியீட்டு விழாவுக்காக செப்டம்பர் 19 அன்று அந்த கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க ஏஜிஎஸ் நிறுவனம் இசை வெளியீட்டு விழாவிற்கு பிரம்மாண்டமாக செலவு செய்ய மறுத்துவிட்டது.

இதனால் இசை வெளியீட்டு விழாவிற்கு முழு பொறுப்பையும் அட்லி ஏற்றுள்ளார். பொதுவாக இசை வெளியீட்டு விழாவிற்கு அனைத்து பத்திரிக்கையாளர்கள் அழைப்பார்கள். ஆனால் இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு பத்திரிக்கையாளர்களை அழைப்பதில்லை என அட்லி உறுதியாக உள்ளார். காரணம் தெரியவில்லை.

படப்பிடிப்பில் ஏற்பட்ட ஒரு விபத்தில் ஒரு லைட்மேன் உயிரிழந்தார் அவருடைய குடும்பத்தினரை அழைத்து இருபது லட்ச ரூபாய் அவர் குடும்பத்திற்கு தருவதாகக் கூறப்படுகிறது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் இதில் கலந்து கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தப் படத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளதால் ஆக மொத்தத்தில் இசை வெளியீட்டு விழா எப்படி நடக்கும் மென ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top