Tamil Cinema News | சினிமா செய்திகள்
சென்னையில் ருத்ரதாண்டவம் ஆடிய பிகில்.. அப்போ கைதி?
கடந்த 10 நாட்களாகவே எங்கு திரும்பினாலும் பிகில், பிகில், பிகில் தான். காரணம் வீட்டை விட்டு வெளியில் வராதவர்கள் கூட பிகில் திரைப்படத்தை குடும்பத்துடன் பார்க்கக் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
சென்னை மட்டுமல்லாது தமிழகமெங்கும் இதே நிலைமை தான். பகல் காட்சிகளில் வழக்கம்போல் சுமாராக ஓடினாலும் இரவு காட்சிகளிலும் விடுமுறை நாட்களில் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றி நடைபோட்டு வருகிறது. தளபதி விஜய்யின் சினிமா வரலாற்றிலேயே இந்த படம் மிகப்பெரிய கலெக்ஷனை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் கைதி திரைப்படமும் வித்தியாசமான கதையம்சத்துடன் காட்சிக்கு காட்சி சுவாரசியத்தை கொட்டி திரைக்கதையில் பிரம்மாண்டம் செய்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. கார்த்தியின் கேரியரிலேயே கைதி திரைப்படம் பெரிய வசூலை பெற்றுள்ளது என்று பேச்சு அடிபடுகிறது.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முக்கிய மார்க்கெடான சென்னையில் பிகில் மற்றும் கைதி திரைப்படத்தின் வசூல் நிலவரங்களை பார்ப்போம். சென்னையில் 10 நாட்களில் பிகில் திரைப்படம் சுமார் ரூ. 10.79 கோடி வசூல் செய்துள்ளது. அதேபோல் கைது திரைப்படமும் ரூ. 3.10 கோடி வரை வசூல் செய்துள்ளது.
பொங்கலுக்கு வெளிவந்த பேட்ட, விஸ்வாசம் படங்களைப் போலவே தீபாவளிக்கு வெளிவந்த பிகில் மற்றும் கைதி திரைப்படமும் வெற்றி பெற்றுள்ளது தமிழ் சினிமாவுக்கு நல்ல தெம்பை கொடுத்துள்ளது என்று சொல்லலாம்.
