Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிகில் வசூல் நிலவரம்.. விநியோகஸ்தர் வெளியிட்ட உண்மை தகவல்
தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கடந்த வருட தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் பிகில். வசூலில் விஜய்க்கு வேறொரு தளத்திற்கு கொண்டு சென்ற திரைப்படம்.
உலகம் முழுவதும் சுமார் 300 கோடி வரை வசூல் செய்ததாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அறிவிப்புகள் வெளியானது. இருந்தும் தற்போது வரை பிகில் படத்தின் மேல் பல குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. அதில் முக்கியமானதாக கருதப்படுவது தமிழ்நாட்டில் பாகுபலி-2 வசூலை முறியடித்தது என கூறப்பட்டதுதான்.
300 கோடி வசூலை கூட ஏற்றுக் கொண்ட மற்ற ரசிகர்கள், தமிழ்நாட்டில் பாகுபலி-2 வசூலை முறியடித்த அதை ஏற்றுக்கொள்ள மறுத்து உள்ளனர். அதேபோல் பல தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் பிகில் படம் தமிழ்நாட்டில் பாகுபலி-2 வசூலை முறியடித்ததாக தெரிவித்தனர்.
ஆனால் ஒரு சிலரோ தொடர்ந்து பிகில் படத்தின் மீது குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல திரைப்பட விநியோகஸ்தகரான திருச்சி ஸ்ரீதர் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில், அவர் விசாரித்தவரை பிகில் திரைப்படம் தமிழ்நாடு அளவில் 130 கோடி தான் வசூல் செய்துள்ளது என வெளிப்படையாக தெரிவித்தார்.
இதற்கு பல தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. சிலர் அதனை ஆதரித்தும் வருகின்றனர். இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து வந்தால் மட்டுமே அனைவருக்குமே தெரியும்.
ஆனால் அதற்கு நூறு சதவீதம் வாய்ப்பில்லை என்பது அனைவரும் அறிந்ததுதான்.
