fbpx
Connect with us

அனிதாவைவிட விஷமாக மாறிய ரம்யா பாண்டியன்.. ஆரியை பற்றி புரளி பேசிய வைரல் வீடியோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அனிதாவைவிட விஷமாக மாறிய ரம்யா பாண்டியன்.. ஆரியை பற்றி புரளி பேசிய வைரல் வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் போர் நிகழ்ச்சி 85 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த சீசன் முடிவடைய இன்றும் இன்னும் மூன்று வாரங்கள் தான் இருக்கின்றன எனும் நிலையில், வீட்டிலுள்ள போட்டியாளர்களின் வேறொரு முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே பாலா, ரியோ போன்றவர்கள் ஆரிக்கு எதிராக செயல்பட்டு வந்த நிலையில், நேற்றைய அண்ட் சீன் ப்ரோமோ வீடியோ மூலம் ரம்யா பாண்டியன், ஆரி மீது செம காண்டில் இருப்பது தெரியவந்துள்ளது.

அதாவது டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் மியூசிக் ஆகிய சேனல்களை பிரபலப்படுத்துவதற்காக பிக் பாஸ் அன்சீன் ப்ரோமோ வீடியோ என்ற உத்தியை பயன்படுத்தி வருகின்றனர் விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தினர்.

அந்தவகையில், நேற்று வெளியான அன்சீன் ப்ரோமோ வீடியோவில் ரம்யா பாண்டியன் அனிதாவிடம், ஆரியை பற்றி பேசியிருக்கும் தகவல்கள் பதிவாகியிருக்கின்றன. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது பிக்பாஸ் 4 தொடங்கியது முதலே தனிக்காட்டு ராணியாக இருந்து வரும் ரம்யா பாண்டியன் ஆஜித்தை தவிர யார் மேலும் பாசத்தை அதிகமாக காட்டியதில்லை. அது மட்டுமில்லாமல், பாலா, ரியோ ஆகியோரை தொடர்ந்து ஆரியை எதிர்க்கும் நபராக ரம்யா இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சீசன் தொடங்கியது முதல் யாரிடமும் பெருமளவு வெறுப்பை காட்டாமல் இருந்து வந்த ரம்யா, ஆரியின் மீது கோபத்தை வெளிப்படுத்தி வருவது  பலரை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு தூங்கும் போது அனிதா சம்பத்திடம், ‘இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஆரி தான் வெளியே போகப் போகிறார்’ என ரம்யா பாண்டியன் பேசியிருக்கும் வீடியோ வெளியாகி, வைரலாகி வருகிறது.

என்னதான் ரம்யா பாண்டியன் அனிதாவிற்கு ஆறுதல் சொன்னாலும், இந்த வாரம் அனிதாதான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்லப் போகிறார் என்று பரவலாக சொல்லப்படுகிறது.

 

Continue Reading
To Top