fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பிக் பாஸ் வீட்டில் புதிதாக உருவான திருட்டுக் கூட்டம்.. வெளியான வீடியோவால் எகிறும் எதிர்பார்ப்பு!

big-boss-promo

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் வீட்டில் புதிதாக உருவான திருட்டுக் கூட்டம்.. வெளியான வீடியோவால் எகிறும் எதிர்பார்ப்பு!

விஜய் டிவியில் தாறுமாறாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 4. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது.

ஏனெனில் அனுதினமும் புதுப்புது டாஸ்களின் மூலம் பிக்பாஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர் நிகழ்ச்சி குழுவினர்.

அந்த வகையில் இன்று விஜய் டிவி வெளியிட்டுள்ள புரோமோ பிக்பாஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என்றே கூறலாம்.

அதாவது இன்று பிக்பாஸ் வீட்டில் ‘பாட்டி சொல்லை தட்டாதே’ என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த  டாஸ்கில் ரம்யா பாண்டியனும், சோம சேகரும் பாட்டியின் மருமகள், மருமகன் என்றும் கேப்ரில்லா பாட்டியின் பேத்தி என்றும் கூறப்பட்டது.

ஆனால் பிக் பாஸ் ரம்யா பாண்டியனை மட்டும் அழைத்து, ‘நீங்க, சோம் ரெண்டு பேரும் திருடர்கள். கேப்ரில்லா உங்க பொண்ணா நடிக்க வந்து இருக்காங்க. நீங்க மூணு பேரும் சேர்ந்து பாட்டி வச்சிருக்க பத்திரத்தை திருடனும். இதுதான் உங்க டாஸ்க்’ என்று கூறி ரம்யாவை ஷாக்  ஆக்கிவிட்டார்.

எனவே, இந்த திருட்டு கும்பலிடமிருந்து எப்படி மற்ற போட்டியாளர்கள் அந்தப் பத்திரத்தை காப்பாற்றப் போகிறார்கள் என்பதை இன்றைய எபிசோடில் தான் பார்க்க வேண்டும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top