Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஷிவானியை ஏங்கவிட்ட பாலாவின் வீடியோ.. காதல் வராது, வந்துச்சுன்னா சொல்றேன்!
விஜய் டிவியில் பிக் பாஸ்4 நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை மக்களை அனுதினமும் பார்க்க வைக்க தூண்டும் வகையில் புரோமோகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர் நிகழ்ச்சி குழுவினர்.
அந்தவகையில் விஜய் டிவியில் வெளிவந்துள்ள இரண்டாவது புரோமோ பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அதாவது இன்று பிக் பாஸ் எவிக்சன்னுக்காக தேர்வானவர்களின் பெயர்களை வரிசையாக கூற ஆரம்பித்தார். மேலும் சிடுமூஞ்சி மேக்ஸிமம், காதல் கண்ணை மறைக்குது போன்ற காரணங்களால் தான் இவர்கள் தேர்வு செய்யப் பட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.
இதனால் கோபமடைந்த பாலாஜி, ‘யாருக்கும் காதல் கண் கட்டல. காதலும் கிடையாது ஒன்னும் கிடையாது. யாராச்சும் இந்த மாதிரி என் முன்னாடி பேசாதீங்க..பேசினா அவ்வளவுதான்!’ என்று கூறினார்.
அதுமட்டுமில்லாமல் ஷிவானியிடம் சென்று, ‘ஷிவானி எனக்கு உன் மேல காதல்லாம் கிடையாது.. சப்போஸ் வந்தா சொல்றேன்! ஆனா வராது’ என்று கூறி, ஷிவானியை ஷாக் ஆக்கினார்.
இந்த வீடியோவை பார்த்த அனைவரும், ‘அப்போ எதுக்குடா இத்தனை நாள் ஒன்னா சுத்துன’ என்று பாலாஜியை சரமாரியாக விளாசி வருகின்றனர்.
