Tamil Cinema News | சினிமா செய்திகள்
வேற லெவலில் மாஸ் காட்டும் கமல்.. அசந்துபோன பிக்பாஸ் ரசிகர்கள்!
தமிழ் சின்ன திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 4. இன்று வாரத்தின் இறுதி நாள் என்பதால் கமல் பிக்பாஸ் வீட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்நிலையில் இன்றைய எபிசோடிற்கான புரோமோ வீடியோ விஜய் டிவியின் சமூகவலைத்தள பக்கத்தில் வெளியாகியுள்ளது.
மேலும் இதில் கமல் வேற லெவல் களமிறங்கி பஞ்சாயத்துகளை தீர்த்து வைத்துக் கொண்டிருப்பதை பார்த்த ரசிகர்கள் பலர் அசந்து போயுள்ளனர்.
அதாவது நேற்றைய எபிசோடில் பாதி பஞ்சாயத்துக்களை மட்டும் தீர்த்த கமல், இன்று மீதி பஞ்சாயத்துகளை விசாரிக்க தொடங்கியுள்ளார்.
அந்தவகையில் கேபி கடந்த வாரம் கூறிய ஹானஸ்ட் என்ற வார்த்தைக்கு லேட்டாக ரியாக்ட் ஆனார் பாலா. இந்த சம்பவத்திற்கு முழுக்க முழுக்க காரணம் சுசித்ராவும் ஷிவானியும் மட்டும்தான்.
மேலும் இன்றைய எபிசோடில் கமல் ஹானஸ்ட் என்ற வார்த்தையை வைத்து என்ன பிரச்சனை நடந்தது என்று கேபி இடம் விசாரித்ததோடு மட்டுமல்லாமல், பாலாஜியிடம், ‘யார் என்ன கூறினார் என்பது எனக்கு தெரியும்’ என்று கூறியிருப்பது புரோமோ வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.
எனவே இன்றைய எபிசோடில் பல சிறப்பான தரமான சம்பவங்கள் நடைபெற உள்ளதால் பிக்பாஸ் ரசிகர்கள் நிகழ்ச்சியை காண மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மேலும் புரோமோ வீடியோவை பார்க்க கீழே கிளிக் செய்யவும்:
