Tamil Cinema News | சினிமா செய்திகள்
தொடங்கியது பிக்பாஸ் வீட்டின் தல தீபாவளி கொண்டாட்டம்.. கலர் கலரா சுத்துறாங்க என்ன பண்ண போறாங்களோ!
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தாறுமாறாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் ஆர்வத்துடன் காண வேண்டும் என்ற நோக்கத்துடன் அனுதினமும் புரோமோக்களை வெளியிடுவதை வழக்கமாய் கொண்டிருக்கின்றனர் நிகழ்ச்சி குழுவினர்.
அந்தவகையில் இன்று விஜய் டிவி வெளியிட்டுள்ள மூன்றாவது புரோமோவில் பிக்பாஸ் வீட்டின் தலை தீபாவளி கொண்டாட்டம் காண்பிக்கப்பட்டுள்ளது.
அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து நாளை வரும் தீபாவளி தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முதல் தீபாவளி.
எனவே இதனை கொண்டாடும் வகையில் பிக்பாஸ் வீட்டில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என களைகட்ட வைத்திருக்கிறார் பிக் பாஸ்.
மேலும் பிக் பாஸ் வீட்டை விளக்குகளால் தீப ஒளி ஏற்றி மகிழ்கின்றனர் பிக் பாஸ் கன்டஸ்டன்ட்கள். இதுவும் அந்த புரோமோ வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே விஜயதசமி கொண்டாட்டத்தின்போது கன்டஸ்டன்ட்கள் அனைவரும் கலர்கலராய் ஜொலித்தது மட்டுமல்லாமல் சண்டைபோட்டு பிக்பாஸ் வீட்டை ரணகளபடுத்தினர்.
தற்போது தீபாவளி கொண்டாட்டத்தின் போது இவர்கள் என்ன செய்யக் காத்திருக்கிறார்களோ என்ற பதற்றத்தில் இருக்கின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.
