Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 14 போட்டியாளர்களின் லிஸ்ட்.. பரபரப்புக்கு பஞ்சம் இல்லை!
விஜய் டிவியில் கடந்த 3 சீசன்களை வெற்றிகரமாக நடத்தி முடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த முறையும் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கவுள்ளார்.
தொகுப்பாளரை மாற்ற விருப்பப்பட்ட விஜய் டிவி, அடுத்த வருஷம் வரும் தேர்தலை முன்னிட்டு கமலஹாசன் கேட்டுக் கொண்டதால் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
இதற்கிடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல நடிகர் நடிகைகளின் பெயர்கள் அடிபட்ட நிலையில் தற்போது ஓரளவுக்கு இறுதி செய்யப்பட்ட லிஸ்ட் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
வனிதாவை வச்சு செய்த சூர்யா தேவி, கிளாமர் புயல் ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், புகழ், அமுதவாணன், பூனம் பஜ்வா, ஜெமினி கிரண், மணிமேகலை, சனம் செட்டி, அதுல்யா, மாடலிங் துறையில் இருந்து இரு இளம் ஆட்கள், மேலும் இரண்டு தமிழ் இளம் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.
அக்டோபர் மாதம் துவங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த முறையை விட இந்த முறை இன்னும் சுவாரசியமாக நடக்கும் என கருத்துக்கள் இப்போதே சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
கடைசி நேரத்தில் இந்த லிஸ்டில் சில மாறுதல்கள் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எப்போதுமே விஜய் டிவி சொல்வது ஒன்று செய்வது ஒன்று தானே. பொறுத்திருந்து பார்ப்போம்!
