தளபதி 64 படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்.. டாப் டக்கர் ஆளுப்பா

தளபதி விஜய் பிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க கமிட் ஆனார். கடந்த வாரம் சூட்டிங் ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தில் இதுவரை யாரும் காணாத தோற்றத்தில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் உடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கேரளா இளம்நடிகர் வர்கீஸ் மற்றும் மாளவிகா மோகனன் என இதுவரை விஜய்யுடன் பார்க்காத புதுமுகங்களை இயக்குனர் தேடித்தேடி எடுத்துள்ளார். மேலும் தளபதி 64 படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில் அனிருத் இசையமைத்து வருகிறார்.

அதையெல்லாம் தாண்டி தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முகன் ராவ் தளபதி 64 படத்தில் இணைந்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

முன்னதாக லோகேஷ் கனகராஜ் கைதி பட டிரைலர் வெளிவந்து சமூக வலைதளங்களில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

mugan
mugan

Leave a Comment