Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ் கவினுக்கு ஜோடியான பிகில் நடிகை.. இந்த பொண்ணு எப்படிப்பா?
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் மூலம் பிரபலமானவர் கவின். அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றார்.
இருந்தாலும் பிக்பாஸ் வீட்டில் அதிக காதல் சர்ச்சைகளில் மாட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது எந்த அளவுக்கு கவினை விரும்புகிறார்களோ அந்த அளவுக்கு ஒரு கூட்டம் வெறுத்து கொண்டுதான் இருக்கிறது.
இருந்தும் அவரது ரசிகர்கள் கூட்டம் இரண்டு மடங்காகி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த ரசிகர்கள் எப்போது கவின் நடிக்கும் படம் வெளியாகும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கவினுக்கு ஜோடியாக பிகில் படத்தில் தென்றல் கதாபாத்திரத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த அமிர்தா ஐயர்தான் ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படத்தை வினித் என்பவர் இயக்கி தயாரித்துள்ளார்.

amirtha-aiyer
லிப்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மார்ச் 13ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என செய்திகள் வந்துள்ளன.
லாஸ்லியா மற்றும் கவின் ஆகிய இருவரும் ஒன்றாக நடிப்பார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
