fbpx
Connect with us

இறுதியாக biggboss-ல் வென்றவர் இவர்தான்.(ஓவியா குத்தாட்டம் வீடியோ உள்ளே)

News | செய்திகள்

இறுதியாக biggboss-ல் வென்றவர் இவர்தான்.(ஓவியா குத்தாட்டம் வீடியோ உள்ளே)

பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 ஜூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுப்புரை ஆற்றி நடத்துகிறார்.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி இந்தி நிகழ்ச்சியான பிக் பாசை அடிப்படையாகக் கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோ . இதில் போட்டியாளர்கள்  இந்த நோக்கத்திற்காகக் கட்டப்பட்ட வீட்டில் வாழ்கின்றனர், மேலும் இவர்கள் உலகின் பிற தொடர்பிலிருந்து இருந்து தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

ஒவ்வொரு வாரமும், வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கு, ஒவ்வொருவரும் அவர்களுடன் குடியிருக்கும் சகப் போட்டியாளர்கள் இருவரைத் பரிந்துரைப்பார்கள். இவ்வாறு வெளியேற்றுவதற்கு அவர்களுக்குள் ஒரு பொது வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டிவரும்.இதில் பரிந்துரைக்கப்பட்டவர்களில் வெளியேறும் ஒருவரை மக்கள் ஓட்டு தீர்மானிக்கும்.

இறுதி வாரத்தில், வீட்டில் மீதமிருக்கும் மூவரில், யார் வெற்றியாளர் என்பதைப் பொதுமக்களின் வாக்களிப்புக்கு விடப்படும். பிற பிக் பிரதர் நிகழ்ச்சிகளைப் போலன்றி, இந்தியப் பதிப்பானது வீட்டில் தங்க, பிரபலங்களைப் பயன்படுத்துகிறது, பொது மக்களிலிருந்து யாரையும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதில்லை.

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி எபிசோட் நேற்றோடு  முடிவடைந்தது. நூறாவது நாளான இன்று, யார் பட்டம் வெல்லப்போவது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிகமாக இருந்தது. சினேகன், ஆரவ், கணேஷ், ஹரீஷ் ஆகிய நான்கு பேரும் இறுதிப் போட்டியாளர்களாக இருந்தனர்.

நேற்று (சனி ) இரவு 8:30 மணிக்கு ஆரம்பித்த ஷோ, இன்று(ஞாயிறு) நள்ளிரவு 12:37 மணிக்கு தான் முடிந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் இந்த இறுதி நாள் ஷோவில் கலந்து கொண்டனர். நமீதா மட்டும் இதில் பங்கேற்கவில்லை.

அதேபோல், இறுதி போட்டியாளர்கள் நான்கு பேரின் குடும்பத்தினரும் இந்த ஷோவிற்கு வந்திருந்தனர். இப்போது சொல்வார்களா, இப்பயவாது சொல்வார்களா என நம்மை சோதித்து இறுதியாக, மூன்றாவது இடத்தைப் பிடித்தவர்களில் இருந்து பெயர்கள் அறிவிக்கப்பட்டது.

இதில் மூன்றாவது இடத்தை கணேஷ் வெங்கட்ராமன் பிடித்தார். இது அனைவருக்கும் சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. ஏனெனில், பலரும் அவர் வெற்றிப் பெறுவார் என எதிர்பார்த்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து, இரண்டாம் இடத்தை ஹரீஷ் கைப்பற்றினார். இறுதியாக, ஆரவ் மற்றும் சினேகன் இருவரில் யார் வெற்றியாளர் என்பதை பலத்த சஸ்பென்சிற்கு இடையே, கமல்ஹாசன் அறிவித்தார்.

ஒருவழியாக, ஆரவ் தான் வெற்றியாளர் என்பதை கமல் அறிவிக்க, அரங்கம் முழுவதும் கைத்தட்டல்களும், விசில்களும் பறந்தன. ஆனால், எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி, கண்ணீர் சிந்தாமல், மிகவும் கேஷுவலாக டைட்டில்வின்னர் பட்டத்தை பெற்றுக் கொண்டார் ஆரவ்.

https://www.facebook.com/amitbhargavactor/videos/1983690355231404/

அவருக்கு கொடுத்த பரிசுத் தொகை ரூ.50 லட்சம். மற்ற போட்டியாளர்களுக்கு, விவோ செல்ஃபோன்கள் பரிசாக வழங்கப்பட்டது. நூறு நாட்களாக மக்களை கட்டிப் போட்டு வைத்திருந்த பிக்பாஸ் ஷோ இன்றோடு இனிதே நிறைவு பெற்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top