ஆணவத்தின் உச்சிக்கு சென்ற வனிதா.. நாமினேசன் லிஸ்டில் இருந்து கிரேட் எஸ்கேப்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வார இறுதியிலும் சுவாரஸ்யமில்லாத போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்களை ஜெயிலுக்குள் அடைப்பது வழக்கம். ஆனால் இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அது கொஞ்சம் வித்தியாசமாக மாறுபட்டுள்ளது.

அதாவது ஒவ்வொரு வாரமும் ட்ரெண்டிங் பிளேயர் யார் என்பது அறிவிக்கப்படும் என்று பிக்பாஸ் கூறுகிறார். இதனால் போட்டியாளர்கள் அனைவரும் ஆர்வம் ஆகின்றனர். அதில் இந்த வார ட்ரெண்டிங் பிளேயராக வத்திகுச்சி வனிதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் பிக்பாஸ் வீடு மொத்தமும் கலகலப்பாக மாறியுள்ளது.

இதுகுறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. அதில் ட்ரெண்டிங் பிளேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட வனிதாவுக்கு சில சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் வனிதா இந்த வார நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பால் குஷியான வனிதா குதூகலமாக டான்ஸ் ஆடிக் கொண்டே தனக்கு கொடுக்கப்பட்ட பிரத்யேக அறைக்குள் செல்கிறார். இவருடைய இந்த ஆட்டத்தை வீட்டில் உள்ள அனைவரும் ரசித்து சிரித்தாலும் பாலா, சுஜா உள்ளிட்ட சிலருக்கு பிடிக்கவில்லை என்பது அவர்களின் முகத்தில் தெரிகிறது.

ஏனென்றால் வீட்டில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணமாக இருப்பவர் வனிதா. இதனால் அவரை எப்படியாவது வீட்டில் இருந்து வெளியேற்றி விட வேண்டும் என்று நினைத்த போட்டியாளர்களுக்கு பிக்பாஸின் இந்த அறிவிப்பு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த ஒரு வாரம் இவருடைய அடாவடியை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற நினைப்பு அனைவரின் முகத்திலும் நன்றாக தெரிகிறது. மேலும் வனிதாவை பிடிக்காத பிக்பாஸ் ரசிகர்களுக்கும் அவர் காப்பாற்றப்பட்ட இந்த செய்தி சிறு கடுப்பை கொடுத்திருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்