Connect with us
Cinemapettai

Cinemapettai

abirami-vanitha

Videos | வீடியோக்கள்

மட்டமான வேலையை செய்த வத்திக்குச்சி வனிதா.. தரமான பதிலடி கொடுத்த அபிராமி!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சற்று முன்பு வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோ அனைவரின் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி ஆரம்பித்து நான்கு நாட்கள் முடிவதற்குள்ளாகவே பாஸ் வீட்டில் 400 சண்டைகள் நடந்து விட்டது.

வழக்கம் போல இந்த சண்டையையும் வத்திகுச்சி வனிதா ஆரம்பித்து வைத்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு காபி கொடுத்தால்தான் பல்லு விளக்குவேன் என்று போராட்டம் நடத்திய வனிதா, இன்று அந்த காபி டப்பாவை எடுத்து தன்னுடைய பெட்டுக்கு அடியில் ஒளித்து வைத்து விட்டார்.

வழக்கமாக டீ குடிப்பவர்கள் எல்லோருக்கும் ஒரு வேளை தான் காபி கொடுக்கப்படும் என்று கூறி அந்த காபி டப்பாவை ஆட்டையை போட்டு சென்றுவிட்டார். இதனால் கடுப்பான அபிராமி, வனிதாவுடன் சண்டைக்கு செல்கிறார். இது உங்களுக்கு மட்டும் சொந்தமானது கிடையாது என்று சொல்கிறார்.

ஆனால் வனிதா எங்கள் டீம் தான் டாஸ்க்கில் ஜெயித்து இந்த காபியை வாங்கியது. அதனால் இது எனக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்கிறார். இதற்கு அபிராமி எல்லோரும்தான் டாஸ்க் விளையாடினோம் எனவே இது அனைவருக்கும் பொதுவானது தான் என்று நியாயமாக பேசுகிறார்.

அதற்கு பதில் பேச முடியாத வனிதா நீ பேசுவது ரொம்ப கேவலமாக இருக்கு என்று வார்த்தையை வீசுகிறார். இதனால் கடுப்பான அபிராமி நீங்கள் செய்வதுதான் கேவலமாக இருக்கிறது என்று கூறுகிறார். உடனே வனிதா இனி இந்த காபியை நான் தொட மாட்டேன் என்று அதை தூக்கி எறிந்து விட்டு செல்கிறார்.

தற்போது இந்த ப்ரோமோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் வனிதா பிக்பாஸ் வீட்டு ஓனர் போல் நடந்து கொள்வது அனைவரையும் எரிச்சல்படுத்தி வருகிறது. ஒரு சர்வாதிகாரி போல் நடந்து கொள்ளும் வனிதாவை சீக்கிரம் வீட்டை விட்டு வெளியே அனுப்புங்கள் என்று பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

ஏற்கனவே வனிதா வீட்டில் உள்ள இளம் பெண்களுக்கு போட்டியாக குட்டி உடையை அணிந்து கொண்டு அட்ராசிட்டி செய்து வருவது பலருக்கும் கடுப்பேற்றிய நிலையில் அவர் தினமும் ஒரு சண்டையை வேண்டுமென்றே இழுப்பது அனைவரையும் முகம் சுளிக்க வைக்கிறது. முழு ப்ரோமோ வீடியோ

Continue Reading
To Top