Videos | வீடியோக்கள்
பிக்பாஸ் வீட்டில் காலில் விழுந்த தாமரை, கட்டியணைத்த அபிஷேக்.. என்னடா நடக்குது இங்க.!
பிக்பாஸ் 5 ன் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிக்பாஸ் வீட்டில் ஒருவரை சேவ் செய்ய ஹவுஸ் மேட்களிடம் கூறுவதாக தெரிகிறது. அதனால் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஒன்று கூடி யாரை சேவ் செய்யலாம் என்று விவாதிக்கின்றனர்.
அபிஷேக் தாமரையிடம் நாங்க எல்லோரும் உன்னை காப்பாத்த தான் முயற்சி செய்கிறோம் என்று கூறுகிறார். இதற்காக தாமரை அவர் காலில் விழுந்து நீ சொன்னதே போதும் என்று அழுகிறார். உடனே அபிஷேக் அவரை கட்டி பிடித்து சமாதானம் செய்கிறார். ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் தாமரையை சேவ் செய்ய ஒருமனதாக கூறுகின்றனர்.
அதற்க்கு அண்ணாச்சி ஏன் எல்லோரும் தாமரையை சொல்கிறீர்கள், சின்ன பொண்ணுவை யாரும் சொல்லவில்லை என்று கேட்கிறார். உடனே பிரியங்கா நான் சின்ன பொண்ணை நாமினேட் செய்கிறேன் என்று கூறுகிறார்.
பின்னர் தாமரையும், சின்ன பொண்ணும் தனித்தனியாக சோகத்துடன் அமர்ந்து இருக்கின்றனர். இவ்வாறு ப்ரோமோ காட்டப்பட்டுள்ளது. இதை பார்க்கும் பொழுது இந்த வார நாமினேஷனில் இருந்து ஒருவரை காப்பாற்றுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
இன்று இரவு முழு எபிசோடும் பார்த்தால் மட்டுமே நமக்கு அது என்னவென்று புரியும். மேலும் ரசிகர்கள் இந்த ப்ரோமோவில் அபிஷேக்கின் நடிப்பு பயங்கரமாக உள்ளது என கருத்து தெரிவிக்கின்றனர்.
