fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கடைசியில் பிரியங்கா காலில் விழுந்த நிரூப்.. ஓட்டை பிரிக்க பக்கா பிளான்

bigg-boss-season5-promo

Videos | வீடியோக்கள்

கடைசியில் பிரியங்கா காலில் விழுந்த நிரூப்.. ஓட்டை பிரிக்க பக்கா பிளான்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து தற்போது இறுதி நிலையை எட்டியுள்ளது. இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும் டைட்டில் வின்னர் யார் என்பதை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அதில் இறுதி போட்டிக்கு அமீர் மற்றும் நிரூப் இருவரும் தேர்வாகியுள்ள நிலையில் மீதமிருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார். தற்போது வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோ வில் போட்டியாளர்கள் அனைவரும் இது நாள் வரை தங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை பேசி சரி செய்கின்றனர்.

இதில் கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் நீங்கள் யாருக்காவது நன்றி அல்லது சாரி சொல்ல வேண்டுமென்றால் சொல்லலாம் என்று ஒரு வாய்ப்பு வழங்குகிறார். அதில் முதலாவதாக வரும் பிரியங்கா, தாமரையிடம் நன்றி என்று சொல்கிறார்.

மேலும் வீட்டில் உள்ள அனைவருக்கும் சாப்பாடு கொடுத்த ஒரே ஜீவன் தாமரை தான், அதனால் அவருக்கு நான் நன்றி சொல்கிறேன் என்று கூறினார். பின்னர் வரும் தாமரை, பிரியங்காவிடம் நான் இது நாள் வரை உன்னை கஷ்டப் படுத்திட்டேன் அதற்காக என்னை மன்னித்துவிடு என்று சொல்கிறார்.

அதை சிரிப்புடன் ஏற்றுக்கொண்ட பிரியங்காவும் சரி இதே போல் எல்லாருக்கும் சாப்பாடு போடு என்று விளையாட்டாக சொல்கிறார். அதன் பிறகு வரும் நிரூப், பிரியங்கா முன் முட்டி போட்டு அமர்ந்து இதுநாள் வரை நடந்த சண்டை குறித்து பேசுகிறார். உன்னை போல ஒரு தோழி கிடைக்காதா என்று நான் பல வருடம் ஏங்கி இருக்கிறேன், உன்னை காயப்படுத்தியதற்காக என்னை மன்னித்துவிடு என்று கூறுகிறார்.

அதை பிரியங்காவும் கண்ணீருடன் ஏற்று கொள்கிறார். இதை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் இறுதிப்போட்டி நெருங்கிவிட்டதால் ஓட்டு வாங்குவதற்காக நிரூப் இவ்வாறு நடிப்பதாக கூறி வருகின்றனர். மேலும் யார் எப்படி நடித்தாலும் ராஜு தான் இந்த டைட்டிலை வெல்வார் என்ற கருத்தையும் தெரிவிக்கின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top