fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

குறும்படம் போட்டு பட்டையை கிளப்பிய ஆண்டவர்.. ஆடிப்போன பிக்பாஸ் போட்டியாளர்கள்

biggboss5

Videos | வீடியோக்கள்

குறும்படம் போட்டு பட்டையை கிளப்பிய ஆண்டவர்.. ஆடிப்போன பிக்பாஸ் போட்டியாளர்கள்

நேற்று ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் இந்த வாரம் முழுவதும் வீட்டில் நடந்த பிரச்சனைகளை பற்றி அலசி ஆராய்ந்தார். அதில் தன்னுடைய கருத்தையும், அறிவுரைகளையும் மற்றவர்கள் மனது நோகாமல் கூறினார்.

இன்று வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ஆண்டவர் மிகவும் சுவாரசியமான ஒரு நிகழ்வை கையில் எடுத்துள்ளார். அதாவது இந்த வாரம் பவானி மற்றும் அபிநய் இருவருக்கும் இருக்கும் உறவை பற்றி சக போட்டியாளர்கள் பொதுவெளியில் பேசி வந்தனர்.

இதற்கு பவானி கடும் கோபத்துடன் ஆட்சேபம் தெரிவித்தார். மேலும் இது என்னுடைய சொந்த விஷயம் அதில் மற்றவர்கள் தலையிடுவது சரியாக இருக்காது என்றும் கூறினார். பவானியின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இந்த நிகழ்வைப் பற்றி நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் இன்று பவானியின் உண்மை முகத்தை குறும்படம் போட்டு காண்பித்துள்ளார். பவானி பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த சில நாட்களிலேயே அபிநய்க்கு தன் மேல் ஒரு ஈர்ப்பு இருக்கிறது என்று சக போட்டியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

இந்த நிகழ்வை குறும்படம் போட்டு காண்பித்த ஆண்டவர் பவானி மற்றும் அபிநய் இருவருக்கும் சற்று அதிகமாகவே குட்டு வைத்தார். சம்பந்தப்பட்ட இருவரும் சொல்ல வேண்டியதை வெளிப்படையாக பேசாமல் இருந்ததால் தான் வீட்டில் இவ்வளவு குழப்பம் வந்திருக்கிறது என்று கூறினார்.

மேலும் இந்த வீட்டில் வேறு யாரும் சேப் கேம் விளையாடவில்லை நீங்கள் இருவரும் தான் அதை செய்கிறீர்கள் என்று அவர்கள் நெற்றியில் அடித்தது போல் கூறினார். இதனால் பவானி மற்றும் அபிநய் இருவரும் ஆடிப் போய் அமர்ந்து இருந்தனர்.

ஓவியா, ஜூலியின் குறும்படத்திற்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு குறும்படமாக இந்த ப்ரோமோ அமைந்துள்ளது. இதன் மூலம் ஆண்டவர் அழகாக நாடகம் போட்ட பவானியின் முகத்திரையை கிழித்தெறிந்து உள்ளார். இந்த நிகழ்ச்சியின் முழு எபிசோடயும் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top