fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பிக்பாஸ் வீட்டில் முழுசா அந்நியனாக மாறிய நிரூப்.. கூலாக டீல் செய்யும் பிரியங்கா

biggboss

Videos | வீடியோக்கள்

பிக்பாஸ் வீட்டில் முழுசா அந்நியனாக மாறிய நிரூப்.. கூலாக டீல் செய்யும் பிரியங்கா

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் நேற்று அபிநய் எலிமினேட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அதை தொடர்ந்து இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெறுகிறது.

அதில் போட்டியாளர்களுக்கு ஒரு கயிறு கொடுக்கப்படுகிறது. அதை யார் கடைசி வரை வைத்து இருக்கிறார்களோ அவர்களே பிக்பாஸ் வீட்டின் தலைவர் என்று பிக்பாஸ் கூறுகிறார். இதனால் நாமினேசனில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள போட்டியாளர்கள் கடுமையாக போட்டி போடுகின்றனர்.

இதில் பிரியங்கா மற்றும் நிரூப் இருவருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வரை செல்ல வேண்டும் என்று விரும்பும் நிரூப் அதற்காக சற்று பதட்டத்துடன் இருக்கிறார். அதன் விளைவாக அவர் தன் கோபத்தை மற்றவர்களிடம் கடுமையாக காட்டுகிறார்.

பிக்பாஸ் வீட்டில் எப்போதும் யாராவது பேசினால் முந்திரிக்கொட்டை தனமாக பதில் கூறும் பிரியங்கா இப்பொழுது நிரூப்பிடம் மாட்டிக்கொண்டார். நிரூப், பிரியங்காவை சரியோ, தப்போ எல்லா விஷயத்துலயும் நீ தலையிடுற என்று கூறுகிறார்.

மேலும் நான் ஒரு முறையாவது இந்த வீட்டின் தலைவராக இருக்க நினைக்கிறேன் என்று சொன்னால் உனக்கு புரியாதா, எதற்காக நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் மூக்கை நுழைக்கிறார் என்று ஆங்கிலத்தில் பொரிந்து தள்ளுகிறார்.

கண்ணை உருட்டிக் கொண்டு முகத்தின் அருகே வந்து பேசும் நிரூப்பை பார்த்தால் நமக்கே மிரட்சியாக இருக்கிறது. ஆனால் ப்ரியங்கா அதற்குக் கொஞ்சமும் சளைக்காமல் அவரை கூலாக டீல் செய்கிறார்.

இதனால் கடுப்பான நிரூப், பிரியங்காவை பார்த்து நீ ஒரு சுயநலவாதி, அடுத்தவர்கள் கஷ்டத்தில் சந்தோஷப்படும் ஒரே ஆளு நீதான் என்று சொல்கிறார். இதற்கும் பிரியங்கா அசால்டாக சிரிக்கிறார். பிக்பாஸ் வீட்டில் நாட்கள் செல்ல, செல்ல போட்டியாளர் ஒவ்வொருவர் முகத்திலும் மரண பீதி தெரிகிறது.

அதிலும் முழுசாக அந்நியனாக மாறிய நிரூப்பை பார்த்தால் நமக்கு சிரிப்பு தான் வருகிறது. 100 நாட்கள் முடிவதற்குள் இன்னும் என்னென்ன அக்கப்போர் பிக்பாஸ் வீட்டில் நடக்க போகிறதோ.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top