fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தலைவரான சந்தோஷம், உற்சாகத்தில் குத்தாட்டம் போட்ட அமீர்.. கூட இருந்து குழி பறித்த பவானி

biggboss

Videos | வீடியோக்கள்

தலைவரான சந்தோஷம், உற்சாகத்தில் குத்தாட்டம் போட்ட அமீர்.. கூட இருந்து குழி பறித்த பவானி

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் நேற்று குறைந்த வாக்குகளைப் பெற்று அபிஷேக் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதைத் தொடர்ந்து இன்று பிக் பாஸ் வீட்டில் தலைவர் போட்டிக்கான டாஸ்க் நடைபெறுகிறது. அதில் சுத்தி சுத்தி வந்தீங்க என்ற பெயரில் இதுவரை நாம் பார்க்காத புதுமையான கேம் ஒன்றும் நடத்தப்படுகிறது.

அதாவது போட்டியாளர்கள் அனைவரும் பாட்டு போட்டவுடன் அங்கு இருக்கும் நாற்காலிகளை சுற்றி ஓட வேண்டும். இறுதியில் இருக்கும் ஒரு நாற்காலியை யார் பிடிக்கிறார்களோ அவர்கள்தான் இந்த வார பிக்பாஸ் வீட்டின் தலைவர் என்று பிக்பாஸ் கூறுகிறார். பின்னர் போட்டி தொடங்கியவுடன் போட்டியாளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் ஓடுகின்றனர்.

அதில் இறுதியாக அக்ஷரா மற்றும் அமீருக்கு இடையே போட்டி நடைபெறுகிறது இதில் இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு இறுதியில் அமீர் வெற்றி பெறுகிறார். பிக்பாஸ் வீட்டின் தலைவரான சந்தோஷத்தில் அமீர் உற்சாகமாக டான்ஸ் ஆடுகிறார்.

அப்பொழுது பிக்பாஸ், பவானியிடம் உங்கள் நாணயத்தை இப்பொழுது பயன்படுத்துகிறீர்களா என்று கேட்கிறார். அதற்கு பவானி ஆமாம் பிக் பாஸ் என்று மகிழ்ச்சியாக சொல்கிறார். கைக்குக் கிடைத்த தலைவர் பதவி பறிபோன அதிர்ச்சியில் அமீர் அப்படியே நிற்கிறார்.

இந்த வாரம் எதிர்பார்த்தது போலவே பவானி தன்னுடைய நாணயத்தை பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம் அமீர் மற்றும் பவானிக்கு இடையே இருந்த நட்பில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த வாரம் தலைவர் பதவியை நிரூப் கைப்பற்றினர்.

அதனால் அவருக்கும், இமான் அண்ணாச்சிக்கும் இடையே பல உரசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. பாவனியுடன்  ஒட்டி உறவாடி கொண்டிருந்த அமீருக்கு சரியான ஆப்பு வைத்ததாக ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top