Connect with us

Cinemapettai

tharsan-biggboss

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸில் இருந்து வெளியேறிய தர்ஷனின் உருக்கமான பதிவு.. வருத்தத்தில் ஆர்மி

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கடந்தவாரம் மக்கள் ஆதரவு அளித்த தர்ஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட செய்தி கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

யாரும் எதிர்பாராத வகையில் நடந்த இந்த எலிமினேஷனால் பலர் நிகழ்ச்சியை கண்டபடி விமர்சித்து வருகின்றனர்.இந்நிலையில் மக்களால் கொண்டாடப்பட்ட தர்ஷன் தனது உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் கூறியதாவது, நன்றாக தெரிந்த ஆட்களிடம் இருந்து கிடைக்கும் அன்பை விட யார் என்று தெரியாதவர்களிடம் கிடைக்கும் அன்பு பெரியது. என்னை உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து ஏற்றுக் கொண்டதற்கு மனதார நன்றி கூறுகிறேன்.

மேலும் இந்த 98 நாட்கள் நீங்கள் அளித்த அன்புக்கும் ஆதரவுக்கும் மிகப்பெரிய நன்றி என தனது உருக்கமான பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

உண்மையிலேயே பிக்பாஸ் டைட்டிலை வெல்லக்கூடிய திறமையான நபர்தான் தர்ஷன். அவர் எலிமினேட் செய்யப்பட்டது புரியாத புதிராகவே உள்ளது..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top