Tamil Cinema News | சினிமா செய்திகள்
எங்களை வைத்து ட்ரையல் பார்த்த பிக்பாஸ் டீம்… கதறும் போட்டியாளர்

பிக்பாஸ் டீம் முதல் சீசன் போட்டியாளர்களை வைத்து ட்ரையல் பார்த்து இருப்பதாக ஆர்த்தி கணேஷ் தெரிவித்து இருக்கிறார்.
அதிக பரபரப்பை ஏற்படுத்தியது பிக்பாஸ் தமிழ் சீசன். ஏகப்பட்ட சண்டை அதிக சர்ச்சைகள் இடையே 100 நாட்கள் ரசிகர்களுக்கு செம எண்டர்டைன்மெண்டாக அமைந்தது. இதை தொடர்ந்து இரண்டாவது சீசன் எப்போது என ஆர்வம் ரசிகர்களிடம் குடி கொண்டது. பல நாட்கள் எதிர்பார்ப்புக்கு பிறகு நேற்று முதல் இதன் ஒளிபரப்பு தொடங்கி இருக்கிறது. முதல் நாளிலேயே சிலபல சித்து வேலைகளைக் காட்டி குதூகலமான வீட்டில் கும்மியடிக்கத் தொடங்கிவிட்டார் பிக் பாஸ்.
போட்டியாளர்களாக யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், மஹத், மும்தாஜ், ஜனனி உள்ளிட்ட 16 பேர் வீட்டுக்குள் பூட்டப்பட்டு இருக்கிறார்கள். இவர்களிடம் இன்னும் நட்பு ஒட்டிக்கொட்டு இருக்கிறது. விரைவில் இவர்களிடம் இருந்து சர்ச்சையை எதிர்பார்க்கலாம். இந்நிலையில், முதல் சீசன் போட்டியாளரான ஆர்த்தி கணேஷ் தனது பிக்பாஸ் அனுபவத்தை வெளியிட்டு இருக்கிறார்.
அவர் பேசுகையில், இந்த சீசன் போட்டியாளர்களுக்கு அறிவுரை எல்லாம் எனக்கு சொல்ல தெரியாது. அது தெரிந்து இருந்தால் நானே வீட்டில் 100 நாட்கள் தாக்கு பிடித்து இருப்பேன். எல்லோருமே நல்லா ப்ளே செய்வார்கள் என நினைக்கிறேன். போக போக இவர்களின் சுயரூபமும் வெளிவரும். என் சாயலில் யாரும் இல்ல. ஏன்னா என் சைஸ் அப்படி. ஒவ்வொருத்தருக்கும் ஒரு குணாதசியம் இருக்கும். அதை அப்படியே கொண்டுவர முடியாது. சமூக வலைத்தளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அப்படி ஒன்றும் இல்லை. அங்கு எல்லாருமே ஒன்று தான். சாதி, மதம் என்றெல்லாம் இல்லை.
மேலும், பிக்பாஸ் வீட்டில் இந்த முறை பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. பாய்ஸ் அறையில் புகைப்பிடிக்கும் பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. கேர்ஸ் அறையில் ஒரு பாத்ரூம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் ஒரு ட்ரஸ்ஸிங் ரூம் வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்து இருக்கிறோம். அப்போது சத்தமே இல்லை. எத்தனை நாள் பெட்ஷீட்குள்ளேயே டிரஸ் சேஞ்ச் பண்ணிருக்கோம் தெரியுமா? ஆனா இப்போ ஓரளவுக்கு சரியான வசதி பண்ணிருக்காங்க. அதான் சொல்றேனே. பிக்பாஸ் எங்கள வெச்சு ட்ரையல் பார்த்திருக்கார் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
