fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தனுஷின் VIP2 படத்தில் வில்லி கஜோல் அசிஸ்டென்டாக நடித்துள்ள பிக்பாஸ் சோம்.. புகைப்படம் உள்ளே

som-biggboss

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனுஷின் VIP2 படத்தில் வில்லி கஜோல் அசிஸ்டென்டாக நடித்துள்ள பிக்பாஸ் சோம்.. புகைப்படம் உள்ளே

தனுஷ் நடிப்பில் வெளியான விஐபி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் கதை எழுத சூப்பர் ஸ்டார் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகி சுமாரான வெற்றியைப் பெற்ற திரைப்படம் விஐபி 2.

இந்த படத்தில் தனுஷுக்கு வில்லியாக பிரபல பாலிவுட் நடிகை கஜோல் நடித்திருந்தார். தனுஷின் கதாபாத்திரத்தை விட வில்லியாக நடித்த கஜோல் கேரக்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

அந்த படத்தில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சோம் என்பவர் நடித்துள்ளது பலருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் பிக் பாஸுக்கு பிறகு அதில் கலந்து கொண்ட பிரபலங்கள் எந்தெந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள் என்பதை ஒரு குழு ஆராய்ந்து வந்தது.

அப்படி கண்ணில் சிக்கியவர் தான் சோம். பெரும்பாலான ரசிகர்களுக்கு சோம், நெய் விளம்பரம் ஒன்றில் நடித்ததாக தான் தெரிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் விஐபி-2 படத்தில் அவர் நடித்ததை இதுவரை யாரும் கவனித்ததில்லை.

இந்நிலையில் தற்போது விஐபி-2 படத்தில் பிக் பாஸ் ஷோம் வரும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. பிக்பாஸ் வீட்டில் தான் கூஜா தூக்கும் வேலை செய்கிறார் என்று பார்த்தால் படத்திலும் அதே கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார்.

biggboss-som-acted-in-vip2

biggboss-som-acted-in-vip2

விஐபி 2 படம் மட்டுமல்லாது பல படங்களில் மிகவும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top