fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

முதல் இடத்திற்கு நீ தகுதியே இல்ல.. சிபியை சீண்டும் போட்டியாளர்

bb5-sibi

Videos | வீடியோக்கள்

முதல் இடத்திற்கு நீ தகுதியே இல்ல.. சிபியை சீண்டும் போட்டியாளர்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று இமான் அண்ணாச்சியின் வெளியேற்றத்திற்கு பிறகு இன்று நாமினேஷன் ப்ராசஸ் நடக்கிறது. அதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரையும் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்கிறார்.

அதன்பிறகு போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுவார்கள். இதனால் போட்டியாளர்கள் முதல் இடத்திற்காக வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

அதில் போட்டியாளர்களிடம் பேசிய பிக்பாஸ் இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்டம் வந்துவிட்டது. அதனால் உங்களுடைய தரவரிசை பட்டியலை தேர்ந்தெடுங்கள் என்று கூறுகிறார். அதில் அபிநய் நான்காவது இடத்தை தேர்ந்தெடுத்து அதற்கு நான் தகுதியானவர் என்று கூறுகிறார்.

அவரைத் தொடர்ந்து வரும் பிரியங்கா நான் இரண்டாவது இடத்தை தேர்ந்தெடுத்து கொள்கிறேன் என்கிறார். அதைத்தொடர்ந்து ஒவ்வொருவரும் தங்களுக்கான இடத்தை தேர்ந்தெடுக்கின்றனர்.

இறுதியில் முதல் இடத்தை சிபி தேர்வு செய்கிறார் ஆனால் அவருடைய தேர்வு சரியில்லை என்று நிரூப் வாதாடுகிறார். அவர் சிபியிடம் கமல் சாரே சொல்லிவிட்டார் நீ சரியாக விளையாடவில்லை என்று அதனால் உனக்கு நம்பர் ஒன் தகுதி கிடையாது என்று சொல்கிறார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த சிபி எனக்கு தகுதி இருக்கு என்று நான் நினைக்கிறேன் மேலும் உன்னைவிட எனக்கு தில்,கெத்து எல்லாம் இருக்கிறது என்று சொல்கிறார். இப்படியாக இவர்களின் வாக்குவாதம் தொடர்கிறது,

முதல் இடத்திற்கு நிரூப் சண்டை விடுவது வேடிக்கையாக இருக்கிறது. உண்மையில் இந்த இடத்திற்கு ராஜு மற்றும் பிரியங்கா இருவரும் மிகவும் பொருத்தமாக இருப்பார்கள். மற்ற போட்டியாளர்களை விட இவர்கள் இருவரும் விளையாட்டில் சற்று நுணுக்கமாக செயல்படுகின்றனர். இருப்பினும் சிபியும் சரியான தேர்வு தான் என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top