Videos | வீடியோக்கள்
பாலாஜியை சுத்தி சுத்தி காதல் செய்யும் சிவானி.. கவின், லாஸ்லியா தோற்று விடுவாங்க போல!
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ்4 நிகழ்ச்சி விஜய் டிவியில் கோலாகலமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியை பார்க்க மக்களை தூண்டும் வண்ணம் தினசரிப் புரோமோகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறது விஜய் டிவி.
அந்தவகையில் இன்று விஜய் டிவி வெளியிட்டிருக்கும் புரோமோ, ஷிவானி ஃபேன்ஸின் இதயத்தை சுக்குநூறாக உடைத்துள்ளது.
அதாவது பிக்பாஸ் வீட்டில் தற்போது தங்கவேட்டை டாஸ்க்கில் ஜெயித்தவர்கள் அரச குடும்பத்தவர்களாக மாறி மற்றவர்களை அடிமைகளாக்கி பல வேலைகளை செய்ய வைத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் நேற்றைய எபிசோட் தாறுமாறாக இருந்தது.
இந்த வகையில் இன்று விஜய் டிவி வெளியிட்டிருக்கும் புரோமோவில், பாலாஜி ஷிவானியை இன்று முழுவதும் பணிப்பெண்ணாக மாற்றி அவருக்கான பணிவிடைகளை செய்ய வைத்திருப்பது, ஷிவானியின் பிக்பாஸ் ரசிகர்களை வயிறெரிய வைத்துள்ளது.
மேலும் காதல் நறுமணம் பிக்பாஸ் வீடு நிரம்பும் வகையில் பாலாஜியும் ஷிவானியும் வீடு முழுவதும் சுற்றிதிரிந்து உள்ளனர். இதனால், ‘இவர்கள் நடந்து கொள்வதைப் பார்த்தால் டாஸ்க்குக்காக செய்வது போல் இல்ல’ என்று சில நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
எனவே, இந்த புரோமோவில் பாலாஜி மற்றும் ஷிவானி ஆகியோரின் காதல் அட்டூழியங்களை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஷிவானியின் நாலுமணி போஸ்ட் ஃபேன்ஸ்சும் ஸ்தம்பித்து நிற்கின்றனர்.
