Connect with us
Cinemapettai

Cinemapettai

பிரியங்காவை உசுப்பேத்தி விடும் அபிஷேக்.. தாமரைக்கு வரவுள்ள அடுத்த பிரச்சனை

Videos | வீடியோக்கள்

பிரியங்காவை உசுப்பேத்தி விடும் அபிஷேக்.. தாமரைக்கு வரவுள்ள அடுத்த பிரச்சனை

பிக்பாஸ் வீட்டில் தலைவர் பதவிக்கு போட்டியாளர்களை தேர்ந்தெடுப்பதில் பிரியங்கா மற்றும் தாமரை இருவருக்கும் நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த புகைச்சல் தற்போது வெளியான ப்ரோமோ விழும் எதிரொலிக்கிறது.

பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ள அபிஷேக் வந்த முதல் இரண்டு நாட்களுக்கு அமைதி புறா வாக இருந்தார். தற்போது அவரின் சகுனி வேலையை பிரியங்காவிடம் ஆரம்பித்துவிட்டார்.

அவர் பிரியங்காவிடம், நீ மற்றவர்களிடம் காட்டும் அன்பில் சில பேர் மட்டும் தான் உண்மையாக இருக்கிறார்கள். அவர்களை நீ விலைக்கு வாங்கிவிடலாம், ஜால்ரா என்றெல்லாம் உன்னை பற்றி தாமரை கூறுகிறார் என்று போட்டுக் கொடுக்கிறார்.

மேலும் இதையெல்லாம் கேட்கும் போது கேவலமாக இருக்கிறது இந்த வாரமாவது உன்னுடைய வாய்ஸை காட்டுவதற்கு இதை யூஸ் பண்ணிக்கோ என்று ஏற்றி விடுகிறார். அதற்கு பிரியங்கா என்னை பற்றி தாமரைக்கோ, மற்றவர்களுக்கோ நிரூபிப்பதற்காக நான் வரவில்லை என்று சொல்கிறார்.

தன்னுடைய பேச்சு எடுபடவில்லை என்று தெரிந்த அபிஷேக் உடனே அந்தர் பல்டி அடிக்கிறார். எனக்கு என்ன, நீங்க என்ன வேணாலும் பண்ணுங்க என்று பிரியங்காவிடம் கூறுகிறார். இவ்வாறு இன்றைய ப்ரோமோ காட்சி வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அபிஷேக் பிரியங்காவின் மூலம் தனக்கு புகழைத் தேடிக் கொள்ள விரும்புகிறார். அதனால் இந்த மாதிரி கொளுத்திப் போடும் வேலையை செய்து வருகிறார். பிரியங்கா முன்பு போன்று இல்லாமல் தற்போது அபிஷேக்கிடம் சற்று உஷாராக இருக்கிறார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top