பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 8 போட்டியாளர்கள் லிஸ்ட்.. கொண்டாட்டம் தான்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்தது. ஆனால் கடைசியாக நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 4 எதிர்பார்த்த அளவு இல்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக இருந்தது.

அதையெல்லாம் சரி செய்யும் வகையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை கவனத்துடன் தேர்வு செய்து வருகிறதாம் விஜய் டிவி நிறுவனம். இதுவரை பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் முதலில் எட்டு போட்டியாளர்கள் கலந்து கொள்ளப் போவதாக ஒரு லிஸ்ட் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் சமீபத்தில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து கனி, சுனிதா, கவர்ச்சி நடிகை சகிலாவின் மகள் மீலா, பாபா பாஸ்கர் போன்றோரிடம் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளது.

அதனைத் தொடர்ந்து டிக்டாக்கில் பிரபலமான ஜிபி முத்து, சார்பட்டா பரம்பரை படத்தில் டாடி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் விஜய், பிரபல நடிகை ஐஸ்வர்யா, கடந்த சீசனில் கலந்துகொண்ட சம்யுக்தா என்பவரின் தோழி ப்ரதாயினி ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இது ஆரம்ப கட்ட போட்டியாளர்கள் லிஸ்ட் மட்டும் தான் எனவும், மேற்கொண்டு இதில் எத்தனை பேர் விலகுகிறார்கள், யார் யாரெல்லாம் புதிதாக உள்ளே நுழைய போகிறார்கள் என்பதெல்லாம் விஜய் டிவிக்கு மட்டும் தான் வெளிச்சம்.

விஜய் டிவி ஒரே நேரத்தில் பிக் பாஸ் சீசன் 5 மற்றும் குக் வித் கோமாளி சீசன் 5 ஆகிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி ஒட்டுமொத்த டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றவுள்ளதாம். விடுமுறை நாட்களில் மக்கள் அனைவருமே விஜய் டிவியை மட்டும் தான் பார்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறதாம் நிறுவனம்.

biggboss-season-5-cinemapettai
biggboss-season-5-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்