Connect with us
Cinemapettai

Cinemapettai

bigg-boss

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் டிஆர்பி-காக சிக்கப்போகும் சர்ச்சை ஜோடி.. கலவரத்துடன் ஆரம்பமாகும் சீசன் 4

ரசிகர்கள் அடுத்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் பற்றிதான். 3 சீசன்களை கடந்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் அடுத்த ஜூன் மாதம் ஆரம்பம் ஆகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனுக்கு தற்போது விஜய் டிவி ஆட்களை தேர்ந்தெடுத்து வருகிறது. எப்போதுமே சர்ச்சையான ஆட்களையும் செண்டிமெண்டாக ஆட்களையும் வைத்து டிஆர்பி எதிர்கொள்வதில் விஜய் டிவி அடித்துக்கொள்ள ஆளில்லை.

அந்தவகையில் கடந்த சீசனில் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி ஆகியோர்களின் பிரச்சனையை பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்து வந்து பெரிய அளவில் வருமானம் பார்த்தது. இந்த வாட்டியும் அதேபோல் ஒரு ஜோடியை தான் பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்து வர உள்ளனர்.

அது வேற யாரும் இல்லை. சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய புருஷனை இன்னொருவர் வைத்திருக்கிறார் என ஊரே காரித்துப்பும் அளவுக்கு நடந்து கொண்டவர்கள் தான் ஜெயஸ்ரீ மற்றும் ஈஸ்வர்.

jayasri-eswar

jayasri-eswar

மகாலட்சுமி என்பவரை கள்ளக்காதல் செய்ததாக ஜெயஸ்ரீ ஈஸ்வரின் மீது குற்றம் சாட்டி அந்த பிரச்சனை ஊர் உலகம் அனைவருக்கும் தெரியும் வகையில் நடந்தது. தற்போது அவர்களைத்தான் டார்கெட் செய்துள்ளது விஜய் டிவி.

மேலும் பெரிய சம்பளம் என்பதால் அவர்களது சொந்த பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள பிக்பாஸ் வீட்டிற்குள் வருவார்கள் என தெரிகிறது. ஏப்ரல் மாதத்தில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான அறிகுறிகள் தெரிய வாய்ப்பு இருப்பதாக விஜய் டிவி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top