Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ் அடுத்த சீசன் 3 தொகுப்பாளர் இவர் தானா?
கமல்ஹாசனின் அரசியல் வேலைகள் ஒரு பக்கம் இருக்க அவருடைய சினிமா வேலைகளை நிப்பாட்டி வைத்துவிட்டு பிக் பாஸ் வேலைகளில் இறங்கிவிட்டார். அப்படி என்றால் அதன் வருமானம் சினிமாவை விட அதிகம் இருக்கலாம். வேற என்ன மக்கள் சேவைக்காகவா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
சரி நேற்றுடன் இந்த தொல்லை முடிந்தது என நிம்மதிப் பெருமூச்சு விட அடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நாலு குறித்துவிட்டார்கள். ஐஸ்வர்யா ரித்திகா என போட்டி போட்டு பிக்பாஸ் தேர்தலில் வெல்ல காத்திருந்தனர் கடைசியில் ரித்திகா வென்று விட்டார்.
இந்நிலையில் ஒரு பார்வையாளர் பிக்பாஸ் மூன்றாவது சீசன் நீங்கள் தொகுப்பாளராக தொடர்வீர்கள் என்ற கேள்விக்கு? தொடர வேண்டுமா வேண்டாமா என கமல்ஹாசன் திருப்பி அவரையே கேட்டார். அதற்கு அந்த பார்வையாளர் கண்டிப்பாக தொடர வேண்டும் என சொல்ல அவரும் மகிழ்ச்சியா பண்ணிட்டா போச்சு என சொல்லிவிட்டார். இந்நிலையில் வேறு ஏதும் பிரச்சினைகள் வராமல் இருந்தால் கண்டிப்பாக கமல்ஹாசன் தொகுப்பாளராக தொடர்வார்.
