News | செய்திகள்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது பிக்பாஸ் சீசன் 2 ப்ரோமோ.!
தமிழின் முதல் சீசனிலேயே சூப்பர் ஹிட் அடித்த பிக்பாஸின் இரண்டாவது சீசனுக்கான ப்ரோமோ வெளியிடப்பட்டு இருக்கிறது.

kamal-hassan-to-host-big-boss
பிக்பாஸ் இந்தி மக்களுக்கு மட்டுமே பரிச்சையமான ஒன்று. அப்படி அந்நிகழ்ச்சியில் என்ன இருக்கும் சுவாரசியம் என பலரும் யோசித்து கொண்டு இருக்க, கடந்த வருடம் தமிழில் கால் பதித்தது. தமிழ் சினிமாவின் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கிறார் என அறிவிக்கப்பட்டது. டீசர் ப்ரோமோவே பலருக்கு எதிர்பார்ப்பை அதிகரிக்க கமலின் மைன் பிக்சர் ப்ரோமோ சக்கை போடு போட்டது. 100 நாட்கள்.. 14 பிரபலங்கள்.. ஒரே வீட்டில்.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. ஐ வில் பீ வாட்சிங் என அவர் கம்பீர குரலை பலருக்கு நிகழ்ச்சியை பார்க்கும் ஆவலை தூண்டியது. குறிப்பிட்ட நாளும் வந்தது எல்லாரும் வீட்டின் முன்னர் ஆஜர். கமலின் வித்தியாசன ஆங்கரிங் முதல் நாளே சூடுபிடிக்கவில்லை. பொறுமையாகவே நிகழ்ச்சியை கொண்டு சென்றார். அதை தொடர்ந்து, அவர் காட்டிய பாவனைகள் எல்லாம் அம்மாடி ரகம் தான்.
வீட்டுக்குள் நல்ல பெயரோடு வந்த பல பிரபலங்கள் தேவையில்லாமல் பேசி அவர்கள் பெயரையே கெடுத்து கொண்டனர். கவர்ச்சிக்காக மட்டுமே வந்தார் என நினைக்கப்பட்ட ஓவியாவிற்கு பின்னால் கோடிக்கணக்கான மக்கள் ஆறுதலுக்கு நின்றனர். பொதுவெளியில் வந்த ஜூலிக்கோ பல வசை பாடல்கள் கிடைத்தது. அது அவர் அழுகைக்காக மட்டுமல்லாமல் உதவி செய்தவர் மீதே பழி போட்டார் என ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை கடிந்துகொண்டனர். கடைசி 100 நாட்கள் வரை சினேகன், ஆரவ் மற்றும் கணேஷ் ஆகியோர் வீட்டில் தாக்குப்பிடித்தனர். ஹரிஷ் கல்யாண் 40நாட்களுக்கு பிறகு வீட்டுக்குள் வந்து கடைசி நாள் வரை இருந்தார். இதில், மக்களின் அமோக ஆதரவை பெற்று ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

bigg-boss-vote
இதை தொடர்ந்து, எப்போ சாமி இரண்டாவது சீசன் தொடங்குவீங்க என பலரும் சமூக வலைத்தளங்களில் கேட்க தொடங்கினர். கமல் அரசியலுக்கு சென்று விட்டதால் அவருக்கு பதில் விஜய், சூர்யா, அரவிந்த் சாமி என பல பிரபலங்கள் பெயர் அறிவிக்கப்பட்டது. இல்லை இல்லை கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. சமீபத்தில், இதன் ப்ரோமோ படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில், இரண்டாவது சீசன் ப்ரோமோவை கமல் தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார். அப்பதிவில், மீண்டும் என் மக்களைச் சந்திக்க வருகிறேன் #உங்கள்நான் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
மீண்டும் என் மக்களைச் சந்திக்க வருகிறேன் #உங்கள்நான்
Coming to meet my people again. Yours forever.
#BiggBossThePeoplesStage#BiggBossTamil2@vijaytelevision pic.twitter.com/HAyoBH8R2G— Kamal Haasan (@ikamalhaasan) May 12, 2018
https://www.youtube.com/watch?v=3vwrTNSNNzE
