Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ்-2 வில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் லிஸ்ட் இதோ.
கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது இந்த நிகழ்ச்சி அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்தது இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் தொடங்க இருக்கிறது, தற்பொழுது இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது, முதல் பாகத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள் சிலர் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்கள் இது அனைவருக்கும் தெரியும்.
மேலும் இரண்டாம் பாகத்தில் கலந்துகொள்ள பிரபலங்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது அந்த பிரபலங்களின் பட்டியலில் இனியா, ராய்லக்ஷ்மி, லட்சுமி மேனன், ஜனனி ஐயர், சொர்ணமால்யா, பூனம் பாஜ்வா, ப்ரியா ஆனந்த், நந்திதா, ஆலியா மானசா, ரகஷிதா, கீர்த்தி சாந்தனு, பரத்.
ஷாம், சாந்தனு, அசோக் செல்வன், ஜித்தன் ரமேஷ், படவா கோபி, பவர் ஸ்டார் சீனிவாசன், ப்ரேம்ஜி, பாலசரவணன், தாடி பாலாஜி, ஜான் விஜய் ஆகியோரிடம் பேச்சுவாரத்தை நடத்தி வருகிறார்கள். இவர்களில் யார் பிக்பாஸ் இரண்டாம் பக்கத்திற்கு உள்ளே வருகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
