Videos | வீடியோக்கள்
பிரமாண்ட செட்டில் கமலின் மாஸ் வசனங்களுடன் பிக்பாஸ்-2 ப்ரோமோ வீடியோ.!
Published on

பிக் பாஸ்-2′ வரும் ஞாயிறு கிழமை முதல் ஒளிபரப்பாகவுள்ள நிலையில் போட்டியாளர்கள் குறித்த தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.
எனினும், நடிகர் பவர் ஸ்டார், மும்தாஜ், தாடி பாலாஜி மற்றும் அவர் மனைவி, எங்க வீடு மாப்பிள்ளை அபர்ணதி, இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகை யாஷிகா உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது புதிய இரண்டு பெயர்கள் பற்றிய உறுதியான தகவல் வெளிவந்துள்ளது.
பிரபல நடிகை ஜனனி ஐயர் மற்றும் வாணி ராணி சீரியலில் நடிக்கும் மமதி சாரி அகியோர் போட்டியாளர்களாக வீட்டுக்குள் நுழைவார்கள் என்று தகவல் வந்துள்ளது. மேலும், கமல் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் கிராண்ட் ப்ரோமோ ஒன்றும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த ப்ரோமோ பதிவு
