Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியை இயக்கும் கோலிவுட் இயக்குநர்கள்… யார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் -2 நேற்று இரவு கோலாகலமாகத் தொடங்கியது. இருட்டு அறையில் முரட்டு குத்து நாயகி யாஷிகா ஆனந்த் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய, அவரைத் தொடர்ந்து 15 போட்டியாளர்கள் நுழைந்தனர்.

அவர்களில், சினிமா வில்லன் பொன்னம்பலம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட புகழ் டேனியல், மூடர் கூடம் மூலம் பிரபலமான சென்ட்ராயன், மங்காத்தாவில் நடித்த மஹத், தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா, நடிகை ஜனனி ஐயர், வாய்ஸ் எக்ஸ்பெர்ட் அனந்த் வைத்தியநாதன், நடிகர் ரியாஸ் கானின் மகன் ஷாரிக் ஹாசன், நடிகை மும்தாஜ், தொகுப்பாளனி மமதி சாரி, ஆர்.ஜே.வைஷ்ணவி, பாடகி ரம்யா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் புகழ் ஐஸ்வர்யா தத்தா, மெட்ராஸ் பட நாயகி ரித்விகா ஆகியோர் போட்டியாளர்களாகக் களமிறங்கியிருக்கின்றனர். இவர்களுடன் பிக்பாஸ் முதல் சீசனில் கலக்கிய ஓவியா ஒரு நாள் கெஸ்டாக தங்கியிருந்தார்.

கடந்த சீசனை விட இந்த சீசன் பிரமாண்டமாக திட்டமிடப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சியும் சுவாரஸ்யமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வீட்டுக்குள் தவறு செய்பவர்களைத் தனிமைப்படுத்தும் வகையில் புதிதாக ஜெயில் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. பேன், கழிப்பறை வசதிகள் என அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் அமைக்கப்பட்டிருக்கும் அந்த ஜெயில் போட்டியாளர்களை பயமுறுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. முதல் நாள் நிகழ்ச்சியைத் தொடங்கும்போது ஜெயில் குறித்த விளக்கம், தனது கட்சி என அரசியல் கருத்துகளோடு அதிரவைத்தார் கமல்.

அதேபோல், காமெடியன்கள், கிளாமர் ஹீரோயின்கள் என இந்த சீசனுக்கான எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. முதல் நாளைக் கடந்து இரண்டாவது நாளை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சி இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. முதல் வாரத்தின் தலைவியாக ஜனனி ஐயரை ஹவுஸ் மேட்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் குறையக் கூடாது என்பதைக் கவனத்தில் கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகக்கவனமாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை கோலிவுட்டின் இரண்டு இயக்குநர்கள்தான் இயக்கி வருகிறார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரையிலான நிகழ்ச்சியை பின்னணியில் இருந்து இயக்கி வருபவர் `ரங்கூன்’ பட இயக்குநர் ராஜ்குமார் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல், கமல்ஹாசன் பங்குபெறும் சனி, ஞாயிற்றுக் கிழமை நிகழ்ச்சிகளை நெல்சன் திலீப்குமார் இயக்குவதாகவும் கூறப்படுகிறது. இவர் நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் கோலமாவு கோகிலா படத்தின் இயக்குநர் ஆவார். இந்த இரு இயக்குநர்கள்தான் பிக்பாஸ் சீசன் 2வை பின்னணியில் இருந்து இயக்கும் நாயகர்கள் என்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top