பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி இந்தி நிகழ்ச்சியான பிக் பாசை அடிப்படையாகக் கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோ இது ஜான் டி மோல் என்பவரால் உருவாக்கப்பட்டது.

இது டச்சு பிக் பிரதர் வடிவத்தை முலமாகக் கொண்டது. இதில் போட்டியாளர்கள் “ஹவுஸ்மேட்ஸ்” என்று அறியப்படுபவர்கள் இந்த நோக்கத்திற்காகக் கட்டப்பட்ட வீட்டில் வாழ்கின்றனர், மேலும் இவர்கள் உலகின் பிற தொடர்பிலிருந்து இருந்து தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

ஒவ்வொரு வாரமும், வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கு, ஒவ்வொருவரும் அவர்களுடன் குடியிருக்கும் சகப் போட்டியாளர்கள் இருவரைத் பரிந்துரைப்பார்கள்.

இவ்வாறு வெளியேற்றுவதற்கு அவர்களுக்குள் ஒரு பொது வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டிவரும்.இதில் பரிந்துரைக்கப்பட்டவர்களில் வெளியேறும் ஒருவரை மக்கள் ஓட்டு தீர்மானிக்கும்.

 

இறுதி வாரத்தில், வீட்டில் மீதமிருக்கும் மூவரில், யார் வெற்றியாளர் என்பதைப் பொதுமக்களின் வாக்களிப்புக்கு விடப்படும். பிற பிக் பிரதர் நிகழ்ச்சிகளைப் போலன்றி, இந்தியப் பதிப்பானது வீட்டில் தங்க, பிரபலங்களைப் பயன்படுத்துகிறது, பொது மக்களிலிருந்து யாரையும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதில்லை.

அதிகம் படித்தவை:  மும்தாஜை பாசத்தை காட்டி அழவைக்கும் பிக்பாஸ்.! தேம்பி தேம்பி அழும் மும்தாஜ் வீடியோ

நல்ல வேளை நம்ம நமீதா இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11வது சீசன் அக்டோபர் 1ம் தேதி துவங்கியது. நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். 18 போட்டியாளர்களை அவர் அறிமுகம் செய்து வைத்தார்.இந்த சீசனில் சர்ச்சைக்கு குறைவிருக்காது போன்று.

 

பிக் பாஸ் வீட்டை ஆர்ட் இயக்குனர் ஓமங் குமார் மற்றும் அவரின் மனைவி வனிதா ஆகியோர் வடிவமைத்துள்ளனர். அவர்கள் 200 பேருடன் சேர்ந்து 55 நாட்களாக பணியாற்றி இந்த வீட்டை வடிவமைத்துள்ளனர்.பிக் பாஸ் வீடு வாஸ்துபடி அமைக்கப்பட்டுள்ளது.

தோட்டப் பகுதியில் புல்வெளி அமைக்கப்பட்டுள்ளது. கலர் கலரான டேபிள்கள், குஷன்கள் போடப்பட்டுள்ளது. ஜிம், நீச்சல் குளம் உள்ளது.போட்டியாளர்கள் புகைப்பிடிக்க வசதியாக தனியாக ஒரு அறையும் உள்ளது. படுக்கையறையில் 8 டபுள் பெட்டுகள் உள்ளன. போட்டியாளர்கள் அதை தான் பயன்படுத்த வேண்டும்.

அதிகம் படித்தவை:  இவள் தான் என் உலகம் என தனது காதலியுடன் நெருக்கமாக இருக்கும் ரொமாண்டிக் புகைப்படத்தை வெளியிட்ட மகத்.!

பாத்ரூமில் கூட செயற்கை புல் வைத்துள்ளனர். இரண்டு குளியல் அறைகள், டாய்லெட்டுகள் உள்ளன. பிக் பாஸ் வீட்டில் பாதாள சிறை உள்ளது. அதில் சுத்தமே இல்லாத கழிவறை மற்றும் 3 படுக்கைகள் உள்ளன. சரப்ஜித் படத்தில் வந்தது போன்றே வேண்டும் என்று கேட்டு இப்படியொரு கழிவறையை வடிமைக்க செய்துள்ளனர்.

எங்கும் சுத்தம், எதிலும் சுத்தம் என்று பேசும் நம்ம நமீதாவுக்கு இந்த சிறை பாத்ரூமை பார்த்தாலே நிச்சயம் கோபம் வரும். நல்ல வேளை அவர் இந்தி பிக் பாஸில் கலந்து கொள்ளவில்லை.

இந்த biggboss 2 வீடு பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு ஒரு புது விதமாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.