Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் சீசன் 2வில் கமல்.. ஒப்புக்கொண்டதன் பின்னணி தெரியுமா?

தமிழில் விரைவில் தொடங்க இருக்கும் பிக்பாஸ் இரண்டாவது சீசனை தொகுத்து வழங்க கமல் ஒப்புக்கொண்டதன் பின்னணியில் ஒரு முக்கிய தகவலும் இருக்கிறதாம். பிரபலமான இந்தி நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த வருடம் தமிழில் தொடங்கப்பட்டது. இந்தியில் சல்மான்கான் இடத்தை நிரப்ப வேண்டும். குறிப்பாக, அவரை எல்லா தரப்பு ரசிகர்களும் கொண்டாட வேண்டும் என யோசித்த எண்டோமால் நிறுவனத்துக்கு கிடைத்த முதல் பெயர் கமல்ஹாசன். சினிமாவிலே அவரை பலரும் ஆண்டவர் என அழைக்கும் அளவிற்கு ரசிகர்களை சேர்த்து வைத்தவர்.

முதல் நாள் அவரின் அந்த எபிசோடுகள் வெறும் ட்ரைலராகவே அமைந்தன. என்னப்பா? புயல் வருமுனு பாத்தா காற்று தான் வருது என்ற ரீதியில் கமெண்ட்கள் இணையத்தில் வைரல் ஆனது. இதை தொடர்ந்து, அடுத்தடுத்த எபிசோட்களின் அவரின் சுயம் வெளியே வந்தது. ஒவ்வொரு வார இறுதியில் அவருக்காகவே காத்திருந்தது ஒரு கூட்டம். அதிலும், அவரின் புரியாத மொழியுடன் வெளியிடப்படும் ப்ரோமோகளை பார்த்து பலரும் குழம்பி கிடந்ததெல்லாம் ஒரு காலம். மற்ற மொழி தொகுப்பாளர்கள் கூட வார்த்தையாக திட்டி விடுவதை, தன் கண்ணாலே காட்டி அசரடித்தவர்.

அச்சோ முடிஞ்சுட்டா… அடுத்த சீசன் எப்போ என கடந்த வருடமே ஆரவாரங்கள் கிளம்பியது. இதை தொடர்ந்து, கமல் தொகுத்து வழங்க மாட்டார் என புது புரளிகளும் பின்னாலே படையெடுத்தது. விஜய், சூர்யா, மாதவன் என பல பிரபலங்கள் பெயர் அடிப்பட்டது. கடைசியில் இல்லை இல்ல யாரும் இல்ல மறுபடி நம்ம கமல்ஹாசனே தொகுத்து வழங்க இருக்கிறார் என தகவல்கள் வெளியானதும், மீண்டும் பரபரப்பு தொற்றி கொண்டது. இதை தொடர்ந்து, இந்த சீசனுக்கான கமலின் முதல் ப்ரோமோ படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூன் மாதம் முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கட்சி ஆரம்பித்தவர் மீண்டும் தொலைக்காட்சிக்கு எப்படி வந்தார் என பலரும் குழப்பத்தில் உள்ளனர். முதலில், தன் கட்சியை மக்களிடம் பதிய வைக்கும் களமாக இது இருக்கும் என கமல்ஹாசன் நம்புகிறார். அதை விட, கட்சிக்கு நிதி அதிகமாக தேவைப்படும் அதை ரசிகர்களிடம் பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறதாம் மக்கள் நீதி மய்யம். இந்த நிகழ்ச்சியில் தனக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை கட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்பதற்கே மீண்டும் பிக்பாஸிற்கு கமல் ஓகே சொன்னதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top