Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் 2 சீசனில் இந்த நிர்வாண போராட்ட நடிகையா?

விரைவில் தொடங்க இருக்கும் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் நிர்வாண போராட்டம் செய்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய ஸ்ரீரெட்டி கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி என்ற அங்கீகாரத்துடன் தமிழில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது பிக்பாஸ் முதல் சீசன். ஒரு பக்கம் ஓவியாவிற்கு ரசிகர்கள் ஆர்மியாக உருவாகினர். இன்னொரு பக்கம் பொதுவெளியில் இருந்து வீட்டுக்குள் இருந்த ஜூலிக்கு வசை பாடல்களே அதிகம் கிடைத்தது. இதே நேரத்தில், தெலுங்கிலும் பிக்பாஸின் முதல் சீசன் தொடங்கப்பட்டது. இதை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார்.

பல எதிர்ப்புகளும் நிலவியதால், 100 நாட்களை, 75 நாட்களாக குறைத்து, வெளியுலக தொடர்பு இல்லாமல் 14 பிரபலங்கள் ஒரே வீட்டில் அடைக்கப்பட்டனர். முமைத்கான் சமீர், கல்பனா ராகவேந்தர், சிவ பாலாஜி, மகேஷ் கத்தி, ஹரிதேஜா ஆகிய முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில், கடைசி வரை வீட்டில் தாக்கு பிடித்து ரசிகர்களின் ஆதரவுடன் நடிகர் சிவபாலாஜி முதல் சீசனின் வெற்றியாளர் ஆனார்.

இதை தொடர்ந்து, தெலுங்கின் இரண்டாவது சீசன் தொடங்கப்பட இருக்கிறது. முதல் சீசனின் படப்பிடிப்பை புனேயில் நடத்தி வந்த நிலையில், அடுத்த சீசன் படப்பிடிப்பை ஐதராபாத்திலேயே நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்த சீசனை ஜூனியர் என்.டி.ஆருக்கு பதில் நானி தொகுத்து வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில், இதில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர் ஒருவர் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தெலுங்கு சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் அதிகமாகி விட்டது ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் அதை வெளியிடுவேன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. இதெல்லாம் சும்மா பில்டெப்பு என்ற ரீதியில், அவரின் நடிகர் சங்க அடையாளம் பறிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, சங்க வாசலில் அமர்ந்து அரை நிர்வாணமாக போராட்டம் நடத்தினார்.

Sree Reddy

இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல சினிமா உலகங்களும், தெலுங்கு சினிமாவை உற்றுநோக்க தொடங்கியது. இதனையடுத்து, தன்னுடன் பழகியவர்களின் அந்தரங்க புகைப்படங்கள், ஆபாச உரையாடல்களின் பிரதி என அவரின் வெளியீடுகள் கோலிவுட் சுசிலீக்ஸை மிஞ்சும் ரகம். இப்படி பல சர்ச்சைகளுக்கு சொந்தகாரராக இருக்கும் ஸ்ரீரெட்டி தெலுங்கு பிக்பாஸ் 2வது சீசனில் கலந்து கொள்ள இருக்கிறாராம்.

இதுகுறித்து, அறிவிப்பு உறுதியானால் இந்த வருட தெலுங்கு பிக்பாஸ் சர்ச்சையில் பட்டையை கிளப்பும் என்பதில் சந்தேகமே இல்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top