Connect with us
Cinemapettai

Cinemapettai

sandy-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் சாண்டியின் இரண்டாவது குழந்தை பிறந்ததை விமர்சித்த சிலர்.. பதிலடி கொடுத்த மனைவி

சினிமாவில் நடன கலைஞராக இருக்கும் சாண்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்தார். சாண்டியின் நகைச்சுவையான குணத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது சினிமாவில் பிசியான நடன இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் சாண்டிக்கு சமீபத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தது. சாண்டி ஏற்கனவே காஜல் பசுபதி என்ற நடிகையை திருமணம் செய்து விவாகரத்து செய்தவர்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக சில்வியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவிக்காமல், சாண்டி உங்கள் மனைவிக்கு எப்படி குழந்தை பிறந்தது? என விமர்சிக்க ஆரம்பித்தனர். சுகப் பிரசவமா அல்லது ஆப்ரேஷன் மூலமா என தேவையில்லாத கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இதனால் அதிருப்தி அடைந்த சாண்டியின் மனைவி சில்வியா, ஒரு குழந்தை பிறப்பதை பற்றி எதற்கு இப்படிக் கேட்கிறீர்கள் என்பது புரியவில்லை, குழந்தைக்கு எது நல்லது என்பது தாய்க்கும் மருத்துவருக்கும் தெரியாதா எனக்கூறி அந்த கருத்தை பதிவிட்டவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

சமூக வலைதள ஆக்கிரமிப்புகளால் இதுபோன்ற சங்கடங்களும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. ரசிகர்கள் நடிகர்களின் நடிப்புகளை விமர்சிப்பதை தாண்டி தற்போது சம்பந்தப்பட்ட பிரபலங்களின் குடும்பங்களை விமர்சிப்பது தொடர்கதையாகி வருகிறது.

biggboss-sandy-cinemapettai

biggboss-sandy-cinemapettai

Continue Reading
To Top