Tamil Cinema News | சினிமா செய்திகள்
ச்சீய் விளம்பரத்தில் அக்ஷயுடன் இணைந்து நடித்த பிக்பாஸ் பிரபலம்..

பிக்பாஸில் அமைதியாக இருந்த கணேஷ் வெங்கட்ராம் ஸ்வச் பாரத்தின் தென்னிந்திய தூதராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். 200க்கும் அதிகமான விளம்பர படங்கள் நடித்து புகழ் பெற்றவர் கணேஷ் வெங்கட் ராமன். அபியும் நானும் மற்றும் உன்னைப்போல் ஒருவன்’ போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு பரிச்சயமானார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பல படங்களில் நடித்தாலும் கணேஷ் வெங்கட்ராமிற்கு வலுவான கதாபாத்திரங்கள் அமையவில்லை.
ஆனால், கடந்த வருடம் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தார். வீட்டில் யார் என்ன செய்தாலும் பரவாயில்லை. நான், என் வேலை உண்டு என இருக்கிறேன் என்பதையே தனது தாரக மந்திரமாக கொண்டவர். பலர் இவரை அதிகம் சாப்பிடுகிறார் என கலாய்த்தாலும், அதையும் கூட பொறுப்படுத்தி கொள்ளவே மாட்டார். அந்த பண்பே அவரை கடைசி நாள் வரை வீட்டில் தக்க வைத்தது. பரபரப்பாக இயங்காததால், சர்ச்சைக்குள் சிக்கி கொள்ள விரும்பாத அவருக்கு வெற்றியாளர் அங்கீகாரம் தட்டி சென்றது. இதை தொடர்ந்து, தற்போது மலையாளத்தில் மை ஸ்டோரி படத்திலும், தமிழிலும் வணங்காமுடி படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஹார்பிக் நிறுவனத்தின் ஸ்வச் பாரத் திட்டத்திற்கான தென்னிந்திய விளம்பர தூதராக கணேஷ் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கான விளம்பரமும் சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அதில், அக்ஷய் குமாருடன், தான் நடித்துள்ளது பெருமையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மனம் திறந்து இருக்கும் கணேஷ், நான் அக்ஷய் குமாரின் மிகப்பெரிய ரசிகன். அவர் இந்த வயதில் கூட எந்த கெட்டப் பழக்கமும் இல்லாமல் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அவருடன் இணைந்து நடித்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாது அனுபவம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
