பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை உலகளவில் பிரபலப்படுத்தியவர் (?) நடிகை ஓவியா. இவர் நிகழ்ச்சியில் பங்குகொண்டிருந்தபோது ஓவியா ஆர்மி என்ற படை இவரை காக்க வீர எழுச்சி கொண்டு வெகுண்டெழுந்தது குறிப்பிடத்தக்கது.

அப்படி புகழின் உச்சிக்கு ஒரே மாதத்தில் சென்ற ஓவியா தற்போது புதுப்பிரச்சனையை கொடுத்துக்கொண்டிருப்பதாக குற்றம் சொல்கின்றனர். யார் என்ன என்பதை செய்தியில் பாப்போம்.

ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் சில திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் ஒப்பந்தமாகி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு அவரை சுற்றி பெரும் ரசிகர் கூட்டம் திரண்டுள்ளது. இதனை ஒரு காரணமாக கருதி ஓவியா முன்பு ஒப்பந்தமான படங்கள் மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் பேசிய தொகையை விட அதிகமான தொகை கொடுத்தால்தான் நடிப்பேன் என்று கிராக்கி செய்கிறாராம்.

அதிகம் படித்தவை:  ஓவியாவிற்கு சம்மன்! தற்கொலை முயற்சியால் வந்ததா வினை?

இதனால் என்ன செய்வதென்று புரியாத தயாரிப்பாளர்கள் ஓவியாவை வைத்து படங்களையும், விளம்பரங்களையும் தொடர்வதா வேண்டாமா என்று யோசனை செய்து வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  விஜய் டிவியையே ஓரம் கட்டிய ஓவியாவின் ட்விட்

சிலர் பப்ளிசிட்டி குறைவதற்குள் கேட்கும் பணத்தை கொடுத்து ஷூட்டிங்கை எடுத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனராம். ஏற்கனவே பெயர் வைக்கப்பட்ட ஒரு திரைப்படத்தின் பெயரை ஒவியாவிற்காக தற்போது ஓவியாவை விட்டா யாரு என்று மாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: PM மற்றும் CM பற்றிகூட ஈசியா கமெண்ட் போடலாம் போலருக்கு, ஆனா ஓவியாவுக்கு கமெண்ட் போட ரொம்ப பயமா இருக்கு….