fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

நேருக்கு நேராக எதிரியை முடிவு செய்ய வைத்த பிக்பாஸ்.. ரணகளமான இந்த வார நாமினேஷன்

biggboss5

Videos | வீடியோக்கள்

நேருக்கு நேராக எதிரியை முடிவு செய்ய வைத்த பிக்பாஸ்.. ரணகளமான இந்த வார நாமினேஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடிகர் சஞ்சீவ் குறைந்த ஓட்டுகளை பெற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு இன்று பிக்பாஸ் வீட்டில் ஓப்பன் நாமினேஷன் நடைபெறுகிறது.

அதில் பிக்பாஸ் வீட்டில் உள்ள கார்டன் ஏரியாவில் நிறைய மாலைகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றை எடுத்து போட்டியாளர்கள் யாரை நாமினேட் செய்ய விரும்புகிறார்களோ அவர்களின் கழுத்தில் அந்த மாலையை போட வேண்டும் என்று பிக்பாஸ் அறிவிக்கிறார்.

அதில் முதலாவதாக வரும் சிபி, நிரூப்பிற்கு மாலை போட்டு என்னை பொறுத்த வரைக்கும் நீ நேர்மையாக ஆடவில்லை என்று கூறுகிறார். பின் இறுதி போட்டிக்கு செல்லும் டிக்கெட்டை பெற்றுள்ள அமீர், ராஜுவை நாமினேட் செய்து அவருக்கு மாலை போடுகிறார்.

பின்னர் வரும் பவானி ரெட்டி, ராஜூவுக்கு மாலையை போட்டு ஹாப்பி நாமினேஷன் என்று சொல்கிறார். அவரிடம் ராஜு நீ நேத்து ஒன்னு பேசுவ, மறுநாள் காலையில வேற மாதிரி பேசுவ என்று சொல்கிறார். இதைக் கேட்டு பவானி மிகுந்த கோபம் அடைகிறார்.

அவர்களுக்குப் பிறகு வரும் பிரியங்கா, தாமரையின் தலையில் ஒரு மலர் கிரீடத்தை வைக்கிறார். பதிலுக்கு தாமரையும், பிரியங்காவை நாமினேட் செய்து அவரது தலையில் கிரீடம் வைக்கிறார். சென்ற வாரம் மிகவும் மோசமாக சண்டையிட்டுக் கொண்ட இந்த இருவரும் இன்று ஒருவரையொருவர் நாமினேட் செய்து கொள்கின்றனர்.

இதில் பிரியங்கா, தாமரையிடம் நான் மட்டும் உனக்கு ரொம்ப ஈசியா போயிட்டேன், பிரியங்கா தான அவள அடிப்போம் என்று நினைச்சியா என்று கேட்கிறார். அதற்கு தாமரை தப்பு செய்தவனை விட தப்பு செய்ய தூண்டுறவன் ரொம்ப கெட்டவன் என்று பதிலளிக்கிறார்.

நேற்று இரவு மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்த போட்டியாளர்கள் அனைவரும் இன்று இறுதிப்போட்டிக்கான களத்தில் குதித்துள்ளனர். இறுதி போட்டி நெருங்கி விட்டதால் நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றாலும் இந்த வாரம் அமீரை தவிர அனைவரும் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெறுவார்கள். அதனால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நிறைய கலவரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top