Connect with us
Cinemapettai

Cinemapettai

Biggboss5

Videos | வீடியோக்கள்

பிக் பாஸில் பயந்துபோன நீரூப்.. அண்ணாச்சிக்கு செம்ம ஆப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஐக்கி பெர்ரி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு இன்று பிக்பாஸ் வீட்டில் தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் நடைபெறுகிறது. இந்த டாஸ்க் கோபுரங்கள் சாய்வதில்லை என்ற பெயரில் நடத்தப்படுகிறது. அதில் தலைவர் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருளை வரிசையாக கோபுரம் போல் அடுக்க வேண்டும். அப்படி அவர்கள் அடுக்கும் பொழுது வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அதை தடுப்பதற்கான முயற்சி செய்வார்கள்.

இதை எல்லாம் தாண்டி யாருடைய கோபுரம் அப்படியே நிற்கிறதோ அவர்களே வீட்டின் தலைவர் ஆவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் இமான் அண்ணாச்சி, அபிஷேக், சிபி மூவரும் போட்டியிடுகிறார்கள். இந்த மூவரில் அண்ணாச்சியுடைய கோபுரம் சாயாமல் அப்படியே நிற்கிறது. மேலும் அண்ணாச்சி இதுவரை நான் தலைவராக இருந்ததில்லை அதனால் இந்த முறை நான் தலைவராகலாம் என்று நினைக்கிறேன் என்கிறார். அப்பொழுது பிக்பாஸ் நாணயம் டாஸ்க்கில் வெற்றி பெற்ற நபர்கள் இப்பொழுது இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஒரு வாய்ப்பு தருகிறார்.

நாணயத்தை வைத்துள்ள நிரூப் நான் அதை பயன்படுத்த நினைக்கிறேன் என்று கூறுகிறார். தலைவர் ஆனால் இந்த முறை நாமினேட் ஆக மாட்டோம் என்று நினைத்த இமான் அண்ணாச்சிக்கு இது அதிர்ச்சியை தருகிறது அதனால் அவர் நிரூப்பிடம் நீ பயந்துட்ட என்று சொல்கிறார்.

இதுக்கு என்ன  காரணம் என்று பார்த்தால் நேற்று எலிமினேஷனில் கடைசி வரை நீரூப்பை வச்சு செய்ததால் அவருக்கு ஏற்பட்ட பயம் தான் தற்போது தலைவர் பதவிக்கு அவரை தூண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top