பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ரீ, பரணி, ஓவியா போன்றோர் சில தவிர்க்க முடியா காரணங்களுக்காக வெளியேறினர். இப்படி இவர்கள் திடீர் என்று விலகியதால் முன்னர் திட்டமிட்ட அதே கால அட்டவணையில் நிகழ்ச்சியை தொடர இயலாததால் விஜய் டிவி சில புதிய பிரபலங்களை உள்ளே அனுப்புவதற்கு திட்டமிட்டது.

அதன்படி கடந்த இரு வாரங்களுக்கு முன் பிந்து மாதவி புதிதாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

bindhu madhavi varunmanianபிந்து மாதவியை தொடர்ந்து இன்று கவர்ச்சி நடிகை சுஜா வருணி அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

சுஜா வருணி 2002ம் ஆண்டு வெளிவந்த ப்ளஸ் டூ என்னும் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் கன்னடத்தில் களமிறங்கி அங்கு ஒரு ரவுண்டு வந்தார்.

Suja Varuneeஅதன் பிறகு தமிழில் சில கவர்ச்சி பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டார். எதுவும் வேலைக்கு ஆகாமல் சும்மா இருந்த இவர் தற்போதுதான் சில சின்ன சின்ன நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் இறுதியாக நடித்து நல்ல பெயர் வாங்கிய படங்கள் கிடாரி, குற்றம் 23.

தற்போது எதன் அடிப்படையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தேர்வானார் என்ற விபரம் தெரியவில்லை. காயத்ரியை இவராவது தாக்கு பிடிப்பாரா என்று பொறுத்திருந்து பாப்போம்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: அதென்ன ஒரே கவர்ச்சி நடிகைகளா இறக்குமதி பண்றாங்க… எது எப்படியோ சிநேகன் காட்டுல மழை….