அண்ணாத்த ஸ்டைலில் கால்மேல் கால்போட்டு கெத்தாக இருக்கும் பிக்பாஸ் முகேன்.. வைரலாகும் வேலன் போஸ்டர்

பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னரான முகேன் தற்போது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் முதலில் வெளியாக இருக்கும் திரைப்படம் வேலன்.

கிராமத்து கமர்ஷியல் அம்சமாக உருவாகும் இந்த திரைப்படத்தில் வேலன் கதாபாத்திரத்தில் பக்கா கிராமத்து பையனாக செட் ஆகிவிட்டார் முகேன். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இளைய திலகம் பிரபு நடிக்க உள்ளார்.

நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன், காமெடி நடிகர்களாக சூரி, தம்பி ராமையா, லொள்ளு சபா சுவாமிநாதன் என பலரும் நடிக்கின்றனர். கோபி சுந்தர் இசையமைக்கும் இந்த படத்தை கவின் என்பவர் இயக்கி வருகிறார்.

கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளப் பக்கங்களில் வேலன் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் போஸ்டரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பின.

அந்த வகையில் முகேன் கதாபாத்திர போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக முகேன் ரசிகர்கள் இந்த போஸ்டரை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

அண்ணாத்த ரஜினியைப் போல கால்மேல் கால்போட்டு கெத்தாக அமர்ந்திருக்கும் அந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் இந்த போஸ்டரில் முகேன் பார்ப்பதற்கு சிவகார்த்திகேயன் போலவும் உள்ளார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

mugen-velan-poster
mugen-velan-poster
- Advertisement -spot_img

Trending News